/tamil-ie/media/media_files/uploads/2019/08/Vivo.jpg)
Vivo S1 Smartphone specifications
Vivo S1 Smartphone specifications, price, launch, availability, pre-order : விவோவின் எஸ்1 இந்தியாவில் வருகின்ற புதன்கிழமை (07/08/2019) அன்று அறிமுகமாக உள்ளது. ஆஃப்லைன் ஸ்டோர்கள் மூலமாக நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அந்த நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
அதன்படி நீங்கள் ரூ. 2000-த்தை டவுன் பேமெண்ட்டாக கொடுத்து இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ப்ரீ ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆனாலும் பேசிக் வேரியண்டான 4ஜிபி ஸ்மார்ட்போன் மட்டுமே ப்ரீ-ஆர்டர் மூலமாக ஆர்டர் செய்து கொள்ள இயலும்.
Vivo S1 Smartphone specifications
ஆஃப்லைன் ஸ்டோர்களில் 6ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17,990 க்கு விற்பனையாகிறது.
இந்தோனேசியாவில் கடந்த புதன் கிழமை இந்த ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் அறிமுகமானது.
6.38 இன்ச் திரை கொண்டது
ஏ.எம்.ஒ.எல்.ஈ.டி திரையிட்ல் வாட்டர் ட்ராப்லெட் ஸ்டைல் நோட்ச் உள்ளது
இதன் ரெசலியூசன் 1080×2340 பிக்சல்கள் ஆகும்
இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹெலியோ பி65 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்ராய்ட் பையை அடிப்பையாக கொண்ட ஃபன்ட்ச் ஓ.எஸ் 9 -ல் இது இயங்கி வருகிறது.
இந்த திரையின் அடியில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
கேமராக்கள்
விவோ மூன்று பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது. 16 எம்.பி. பிரைமரி சென்சார், 8 எம்.பி. வைட் ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா சென்சார் அளவு 32 எம்.பி. ஆகும்.
பேட்டரி
4500mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்நெல் ஸ்டோரேஜ் மற்றும் 6GB RAM + 128GB இண்டர்நெல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியது.
மேலும் படிக்க : ஜியோவுடன் மோதும் பி.எஸ்.என்.எல்... அபிநந்தன் 151 ப்ரீபெய்ட் ப்ளான்களில் மாற்றம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.