/tamil-ie/media/media_files/uploads/2019/07/D-fPdQcUIAAOS32.jpg)
Vivo Z1 Pro Specifications, Price, Availability, Launch in India
Vivo Z1 Pro Specifications, Price, Availability, Launch in India : இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது. இந்த அறிமுக விழாவை நீங்கள் லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் பார்த்துக் கொள்ளலாம். இந்த போன் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Vivo Z1 Pro launch event
இந்த அறிமுக விழாவை இன்று மதியம் 12 மணிக்கு விவோவின் அதிகாரப்பூர்வ யூடியூப்பில் நீங்கள் கண்டுகளிக்கலாம். நாங்கள் அதற்கான இணைப்பை கீழே கொடுத்துள்ளோம். அதிலும் நீங்கள் லைவாக நிகழ்வை பார்த்துக் கொள்ளலாம்.
Vivo Z1 Pro விலை :
இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியான விவோ Z5x போனின் இந்தியா வெர்ஷன் என்று கூறப்படுகிறது. 6GB/64GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,498 யுவான் (ரூ.15,000). 6GB/128GB ஸ்டோரேஜ் போனின் விலை 1,698 யுவான் (ரூ.17,000). 8GB/128GB ஸ்டோரேஜ் போனின் விலை 1,998 யுவான் (ரூ.20,000).
Vivo Z1 Pro specifications
6.5 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி ஃபுல் எச்.டி டிஸ்பிளேவுடன் வெளியாகிறது இந்த போன். அஸ்பெக்ட் ரேசியோ 19.5:9 ஆகும். ஸ்நாப்ட்ராகன் 712 ப்ரோசசர் மற்றும் அட்ரெனோ 616 ஜி.பி.யூ பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறைய ட்ர்போக்களுடன் வெளியாகியுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஆண்டி-ஃப்ரேம் ரேட் சென்டர் டர்போ, ஏ.ஐ. டர்போ (AI Turbo), நெட் டர்போ (Net Turbo), கூலிங் டர்போ (Cooling Turbo), கேம் டர்போ ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Vivo Z1 Pro Camera Features : மூன்று பின்பக்க கேமராக்களை (16MP+ 8MP + 2MP) கொண்டுள்ளது இந்த போன். செல்ஃபி கேமரா 32 எம்.பி ஆகும். 5000 mAh பேட்டரி பவர் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் FunTouchOS மூலம் இயங்கி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.