Vodafone-Idea announces new prepaid tariff valid from Dec 3
Vodafone-Idea announces new prepaid tariff valid from Dec 3 : வோடஃபோனின் புதிய ப்ரீபெய்ட் கட்டணங்கள் வருகின்ற மூன்றாம் தேதியில் அமலுக்கு வருகிறது என்று அறிவித்துள்ளது. ரூ.19-ல் துவங்கி ரூ. 2399 வரை புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது நாள் வரையில் ஃப்ரீ அன்லிமிட்டட் கால்கள் என்று அழைக்கப்பட்ட அந்த சிறப்பம்சத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது வோடஃபோன். 1000 முதல் 3000 நிமிடங்கள் என அதை லிமிட் செய்திருக்கிறது.
Advertisment
தொடர் பொருளாதார சிக்கல்களால் மொபைல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று வோடஃபோன் முதலில் அறிவித்தது. பிறகு ஏர்டெல் நிறுவனமும் ஜியோ நிறுவனமும் முறையே தங்களின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். வோடஃபோனின் இந்த அறிவிப்பு குறித்து முழுமையான தகவல்கள் கீழே.
வோடஃபோன் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 1.5ஜிபி, 2ஜிபி, மற்றும் 3ஜிபி டேட்டா பேக்குகளை வழங்கி வருகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ள இயலும். 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய பேக்குகளை ரூ. 249, ரூ.299, மற்றும் ரூ. 399 கட்டணங்களில் விற்பனை செய்து வருகிறது.
'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி
84 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய பேக்குகளை ரூ. 599 மற்றும் ரூ. 699க்கு வழங்க உள்ளது வோடஃபோன். 1.5ஜிபி, 2ஜிபி டேட்டாக்களை முறையே வழங்கும் இந்த பேக்குகள் மூலம் வாடிக்கையாளர்கள் 3000 இலவச நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். 100 இலவச எஸ்.எம்.எஸ்களையும் வழங்கிக் கொள்ளலாம். ரூ. 2399 பேக் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. 1.5ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது இந்த பேக்.
Vodafone limited data packs
வோடஃபோன் நிறுவனம் மூன்று லிமிட்டட் டேட்டா ப்ளான்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. ரூ.149 திட்டம் 1000 நிமிடங்கள் ஆஃப்-நெட் டேட்டா, 2ஜிபி, 300 எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.
ரூ. 379க்கான திட்டத்தில் 3000 ஆஃப் நெட் நிமிடங்கள், 6ஜிபி டேட்டா, 1000 எஸ்.எம்.எஸ்கள் என 84 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் அறிமுகமாகியுள்ளது. 365 நாளுக்குமான ப்ளானில் 12 ஆயிரம் ஆஃப் நெட் டேட்டா நிமிடங்கள், 24ஜிபி டேட்டா, 3600 எஸ்.எம்.எஸ்கள் என்று ரூ. 699க்கான ப்ளான் ஒன்றை வழங்கியுள்ளது வோடஃபோன்.
இதர திட்டங்கள்
இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமில்லாமல் வோடஃபோன் நிறுவனம் மேலும் பல்வேறு திட்டங்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகிறது. ரூ. 19, ரூ. 28, மற்றும் ரூ. 48-களுக்கான டாக்-டைம்களுடன் பேக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 79க்கான பேக்கில் ரூ. 64-க்கு பேசிக்கொள்ளலாம். மேலும் 200 எம்.பி. டேட்டாவும் வழங்கப்படும்.