கோவிட் -19 காரணமாக பலர் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். மக்கள் தங்கள் சொந்த டேட்டா திட்டங்களை வேலை மற்றும் பொழுது போக்குக்காக பயன்படுத்துவதால் ஒவ்வொருவருக்கும் டேட்டா பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைவரும் நமது கைபேசிகளில் தினசரி டேட்டா திட்டங்களுக்கு மாற வேண்டியுள்ளது. தினசரி டேட்டா திட்டங்களை பயன்படுத்தும் போது டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற பயமில்லாமல் வேலை பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் இந்தியாவில் மூன்று பெரிய தொலை தொடர்பு சேவை வழங்குநர்களில் வோடபோனும் ஒன்றாகும். இந்தியாவில் வோடபோன் வழங்கும் தினசரி டேட்டா திட்டங்கள் குறித்துப் பார்ப்போம்.
வோடபோன் திட்டங்கள் 2020 : வோடபோன் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல், சலுகைகள், விலை, டேட்டா மற்றும் வேலிடிட்டி.
45 நிமிடத்தில் 5 லட்சம் வரை கடன்! எந்த வங்கியில் தெரியுமா?
வோடபோன் ரூபாய் 199/- ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1GB அதிவேக டேட்டாவுடன் 100 குறுஞ்செய்திகளும் கிடைக்கும். அளவில்லாத உள்ளூர் மற்றும் STD அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. தினசரி வழங்கப்படும் டேட்டா வரம்பு முடிந்த பிறகு டேட்டாவின் வேகம் 64Kbps என்று குறைந்துவிடும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள்.
வோடபோன் ரூபாய் 398 ரீசார்ஜ் திட்டம்.
வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3GB டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அது முடிந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும். இதுதவிர அளவில்லாத உள்ளூர் மற்றும் STD அழைப்புகள் செய்யும் வசதி, மற்றும் 100 குறுஞ்செய்திகளும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
வோடபோன் ரூபாய் 499/- ரீசார்ஜ் திட்டம்
70 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா வரம்பு முடிந்த பிறகு வேகம் 64Kbps ஆக குறையும். மற்ற திட்டங்களைப் போல இதிலும் அளவில்லாத உள்ளூர் மற்றும் STD அழைப்புகள் செய்யும் வசதி மற்றும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியும் உள்ளது.
மற்ற வங்கிகளை விட எஸ்பிஐ-யில் கிரேடிட் கார்டு வட்டி ரொம்ப ரொம்ப கம்மி!
வோடபோன் ரூபாய் 2,399/- ரீசார்ஜ் திட்டம்
மிகவும் விலை உயர்ந்த திட்டமான இது ஒரு வருட வேலிடிட்டியுடன் வருகிறது. இத்திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா, தினசரி வரம்பு தாண்டிய பிறகு 64 Kbps வேகத்தில் வழங்கப்படுகிறது. மற்ற திட்டங்களைப் போல இதிலும் அளவில்லாத உள்ளூர் மற்றும் STD அழைப்புகள் செய்யும் வசதி மற்றும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியும் உள்ளது.
மேலே சொல்லப்பட்ட அனைத்து திட்டங்களிலும் நிறுவனத்தின் Vodafone Play app ஐ இலவசமாக அணுகும் வசதி மற்றும் OTT app, Zee5 க்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.