scorecardresearch

ரூ.129-க்கு வோடபோனின் புதிய ரீசார்ஜ் ப்ளான்…

அதன் வேலிடிட்டி 90 நாட்களாகும். 1.5ஜிபி 4ஜி டேட்டா நாள் ஒன்றிற்கு என மொத்த வேலிடிட்டி 135 ஜிபி டேட்டா கிடைக்கும்.

Vodafone Rs.129 prepaid mobile recharge plan
Vodafone Rs.129 prepaid mobile recharge plan

Vodafone Rs.129 prepaid mobile recharge plan : ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவிற்கு போட்டியாக புதிய புதிய சலுகைகளை வெளியிட்டு வருகிறது வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள். தற்போது வோடபோன் நிறுவனம் 129 ரூபாய்க்கு புதிய ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Vodafone Rs.129 prepaid mobile recharge plan

இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். அன்லிமிட்டட் போன் கால்கள் பேசிக் கொள்ளலாம். தேசிய மற்றும் உள்ளூர் அழைப்புகள் பேசிக் கொள்ள இயலும். இதற்கு FUP லிமிட் எதுவும் இல்லை.  நாள் ஒன்றிற்கு 100 இலவச மெசேஜ்களை அனுப்பிக் கொள்ளலாம். நாள் ஒன்றிற்கு 3ஜி/4ஜி சேவையில் 1.5ஜிபி டேட்டா வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஆரம்பகாலங்களில் அன்லிமிட்டட் கால்கள் என்பது நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 1000 நிமிடங்கள் மட்டுமே என்ற லிமிட்டேசன் இருந்தது. தற்போது அறிமுகமான இந்த ஆஃப்பரில் உண்மையாகவே அன்லிமிட்டட் கால்கள் பேசிக் கொள்ளலாம்.

குஜராத், சென்னை மற்றும் இதர பெருநகரங்களில் இந்த ரீசார்ஜ் ஆஃபர் தற்போது செயல்படத் துவங்கியுள்ளது.  509 ரூபாய்க்கான ரீசார்ஜ் ப்ளான்களிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர் வோடபோன் நிறுவனத்தினர். அதன் வேலிடிட்டி 90 நாட்களாகும். 1.5ஜிபி 4ஜி டேட்டா நாள் ஒன்றிற்கு என மொத்த வேலிடிட்டி 135 ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் படிக்க : ஹூவாய் மேட் X Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் – எது சிறந்த மடக்கு போன்?

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Vodafone rs 129 prepaid mobile recharge plan launched 1 5gb data