Whatsapp 5 hidden features : வாட்ஸ்ஆப் செயலி பயன்பாட்டிற்கு வந்து இந்த வருடத்துடன் சுமார் 10 வருடங்கள் ஆகின்றது. ஆரம்பத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதற்கான செயலியாக மட்டுமே இயங்கி வந்தது. பின்பு அது மீடியா கண்டெண்ட்கள் பரிமாறப்படும் தளமாகவும் செயல்படத் துவங்கியது. இந்த செயலியில் நமக்கு தெரியாத பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கின்றன.
Whatsapp 5 hidden features
ஹைட் லாஸ்ட் சீன்
நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைன் வந்தீர்கள் என்பதை மறைக்கும் விதமாக இந்த சிறப்பம்சத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். செட்டிங்ஸ்->அக்கௌண்ட்->பிரைவசி->லாஸ்ட் சீன் அதில் டூ மி என்ற ஆப்சனை தேர்வு செய்தால், நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைன் வந்தீர்கள் என்பது யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொள்ளலாம்.
நோ ப்ளூ டிக்ஸ்
சில வருடங்களுக்கு முன்பு தான் ப்ளூ டிக் என்ற ஆப்சனை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்தது. அதன் மூலம் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர்கள் நீங்கள் அந்த மெசேஜ்ஜை ரீட் செய்தீர்களா இல்லையா என்பதை அறிய இயலாது.
செட்டிங்க்ஸ் -> அக்கௌண்ட்->ப்ரைவசி-> ரீட் ரிசிப்ட்ஸ் செலக்ட் செய்து அதனை ஆஃப் செய்தால் ப்ளூ டிக்ஸ் பிரச்சனையில் இருந்தும் எஸ்கேப் ஆகிக் கொள்ள இயலும்.
கஸ்டமைஸ் சாட் பாக்ஸ்
நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தினமும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்வீர்கள் என்றால் அதனை ஷார்ட்கட்டாக மாற்றி உங்களின் ஹோம் ஸ்கிரீனில் வைத்துக் கொள்லலாம். சாட் பாக்ஸில் லாங் பிரஸ் செய்து இந்த ஆப்சனை நீங்கள் தேர்வு செய்து கொள்ள இயலும்.
முக்கியமான செய்திகளை ஹைலைட் செய்ய
சில நேரங்களில் மிகவும் முக்கியமான செய்திகளை நீங்கள் ஒரு சிலருக்கு அனுப்ப விரும்புவீர்கள். போல்டில் அனுப்ப விரும்பினார்ல் இரண்டு பக்கம் ஆஸ்ட்ரிக்ஸ் சிம்பிளை (*) பயன்படுத்துங்கள். இட்டாலிக்கில் அனுப்ப விரும்பினால் இரண்டு பக்கமும் அண்டர் ஸ்கோர் (_)போட்டு அனுப்புங்கள்.
கஸ்டமைஸ் நோட்டிஃபிகேஷன்ஸ்
யாரிடம் இருந்து வரும் நோட்டிஃபிகேஷன்கள் முதலில் காட்டப்பட வேண்டும் என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு உங்களுக்கு விருப்பமான காண்டாக்ட்டுகளை தேர்வு செய்து கொள்ளவும். பின்பு அதை கஸ்டமைஸ்ட் நோட்டிஃபிகேஷனிற்கு மாற்றிக் கொள்ளவும்.
மேலும் படிக்க : வாட்ஸ்ஆப் புகைப்படங்களால் ஸ்டோரேஜ் அதிகமாவதை தடுக்க வழிகள் என்ன ?