வாட்ஸ்ஆப் புகைப்படங்களால் ஸ்டோரேஜ் அதிகமாவதை தடுக்க வழிகள் என்ன ?

How to Stop WhatsApp from Saving and Downloading Data : ஆட்டோ டவுன்லோடில் அனைத்துவிதமான போட்டோக்கள் மற்றும் மீடியாக்கள் சேமிக்க இயலும்.

By: February 25, 2019, 3:53:42 PM

WhatsApp Storage Issue : உலகம் முழுவது, 1.2 பில்லியன் நபர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் நபர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஒவ்வொரு முறையும் பல்க்காக வாட்ஸ்ஆப் இமேஜ்கள் டவுன்லோட் ஆவது மிகவும் எரிச்சலைத் தரும் விசயமாகும். புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப்கள் என்று ஒவ்வொன்றையும் டவுன்லோடு செய்து, அதனைப் பார்ப்பதற்குள் போன் மெமரி ஃபுல் ஆகிவிட, ஒவ்வொன்றாக அதனை டெலிட் செய்ய வேண்டிய சூழல் உருவாகிவிடும்.

வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும் புகைப்படங்கள் நேரடியாக உங்கள் கேலரியில் சேமிக்கப்படுவதை தவிர்ப்பது எப்படி ?

நேரடியாக செட்டிங்க்ஸ் செல்லவும்

அதில் சாட் செட்டிங்க்ஸை தேர்வு செய்யவும்

பின்பு மீடியா ஆட்டோ டவுன்லோடு என்று காட்டும். அதில் மூன்று விருப்பத் தேர்வுகள் காட்டப்படும். மொபைல் டேட்டாவில் டவுன்லோடு செய்வது, வைஃபை டேட்டாவில் டவுன்லோடு, மற்றும் ஆட்டோ டவுன்லோடு ஆகிய மூன்றும் காட்டும். ஆட்டோ டவுன்லோடில் அனைத்துவிதமான போட்டோக்கள் மற்றும் மீடியாக்கள் சேமிக்க இயலும்.

இதனை தவிர்க்க வேண்டும் என்றால், ஆட்டோ டவுன்லோடினை டர்ன் ஆஃப் செய்து கொள்ளலாம். அதற்கு டேட்டா அண்ட் ஸ்டோரேஜ் என்ற ஆப்சனை தேர்வு செய்து, ஆட்டோ டவுன்லோட் ஆப்சனில் நெவர் என்பதை தேர்வு செய்யவும்.

உங்கள் வாட்ஸ்ஆப் மீடியாவில் வரும் புகைப்படங்கள் மற்றும் இதர மீடியா கண்டெண்ட்டுகளை கேலரியில் காண விருப்பம் இல்லை என்றால் சாட் செட்டிங்கில் வரும் சேவ் டூ கேமரா ரோல் மெனுவை டர்ன் ஆஃப் செய்தால் இந்த பிரச்சனையும் தீர்ந்தது.

மேலும் படிக்க : பிரமிக்க வைத்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்… இரண்டாவது போல்டபிள் போன் வெளியீடு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp storage issue how to stop whatsapp from saving download videos photos automatically

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X