WhatsApp download : இன்றைய தொழில் நுட்ப உலகில் வாட்ஸ் அப்பிற்கு என தனி இடம், எல்லோர் மனதிலும் இருக்க தான் செய்கிறது. ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களை தாண்டி, மெசேஜ் செயலியான வாட்ஸ் அப் இன்றைய இளைஞர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.
யூசர்களிடன் தனக்கும் இருக்கும் தனிப்பெருமையை கண்ட வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி அப்டேட்டுகளால் யூசர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ஸ்டேட்டஸ் வசதி தொடங்கி பணப்பரிவர்த்தனை வசதி, மெசேஜ் டெலிட் வசதி என தொடர்ந்து ஒவ்வொன்றாக அப்டேட் செய்து வருகிறது.
வாட்ஸ் அப்பிற்குள் செல்லாமலே, குறிப்பிட்ட நபர்களுக்கு யூசர்களால் மெசேஜ் செய்ய முடியும். இப்படி ஏகப்பட்ட அப்டேடுகளின் அறிமுகத்தால் வாட்ஸ் அப் யூசர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளாக அதிகரிக்கொண்டே வருகிறது.
அந்த வகையில் இப்போது புதிய வசதி ஒன்று அப்டேட் செய்யப்படவுள்ளது. பீட்டா வெர்சனில் சோதனையில் இருக்கும் இந்த அப்டேட்டால் யூசர்களின் ஃபோனில் இருக்கும் தகவல்க்ள், ஆவணங்கள், குறிப்பாக புகைப்படங்கள் அனைத்தும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த பீட்டா வெர்ஷனில் பக் இருபதால் புகைப்படங்கள் உட்பட தகவல்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இனி யாரும் ஏமாற்ற முடியாது... WhatsApp-ல் முக்கிய மெசேஜ்களை சேவ் செய்வது எப்படி?
இருந்த போதும், இந்த அப்டேட் பீட்டா வெர்ஷனில் சோதனையில் மட்டும் இருப்பதால் பயன்பாட்டிற்கு வரும் போது பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு விடும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.