உங்கள் பெர்சனல் மெசேஜை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்… வாட்ஸ்ஆப் பயனாளிகளே உஷார்….

WhatsApp New Bug Exposing Personal Chats to Strangers : இது போன்ற பிரச்சனை இருப்பதாக ஒருவர் மட்டுமே இதுவரை புகார் செய்துள்ளார்.

WhatsApp Bug, WhatsApp spyware hack
WhatsApp Bug

WhatsApp Bug : வாட்ஸ்ஆப் செயலில் தினமும் ஒரு அப்டேட் என்பதைப் போல், தினமும் ஒரு வைரஸ், பக், பிரச்சனை தான். ஆனால் இந்த முறை கொஞ்சம் சீரியஸான பிரச்சனை தான். பெர்சனல் வாட்ஸ்ஆப் சாட்டுகளை உங்களுக்கு முன்பின் தெரியாத நபர்களும் படிக்க இயலுமாம்.

WhatsApp Bug புதிய பிரச்சனை

இந்த பிரச்சனையை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பயனளார் ஒருவர். அதில் “நான் இன்று புதிய அலைபேசி எண் ஒன்றில் லாக் – இன் செய்து வாட்ஸ்ஆப் ஓப்பன் செய்தேன். ஆனால் அந்த அலைபேசி எண்ணை இதற்கு முன்பு பயன்படுத்திய நபரின் வாட்ஸ்ஆப் தகவல்கள் முழுமையாக என்னுடைய வாட்ஸ்ஆப்பில் வருகிறது. ஏதோ சரியாக இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இது புதிய போன். நான் வாங்கியிருக்கும் சிம்கார்டும் புதியது. இந்த மெசேஜ்கள் எதுவும் எனதுடையது அல்ல என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

WhatsApp Bug இதை எப்படி தடுப்பது ?

தங்களுடைய பழைய எண்ணை மாற்றிவிட்டு, புதிய எண்ணில் வாட்ஸ்ஆப் செயலியை தொடங்கும் முன்னர், ப்ரோபைல் இன்ஃபர்மேசன் உள்ளிட்ட தகவல்களை சேஞ்ச் நம்பர் என்ற உதவியுடன் புதிய எண்ணிற்கு உங்களி வாட்ஸ்ஆப் அக்கௌண்ட்டினை முழுமையாக மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவர் ஒரு அலைபேசி எண்ணை பயன்படுத்துவதை நிறுத்தும் போது, பழைய எண்களையெல்லாம் ரீசைக்கிள் செய்து தான் புதிய எண்களாக மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் அளிக்கும். அதனால் பயனாளிகள் வருத்தம் அடைய தேவையில்லை.  இது போன்ற பிரச்சனை இருப்பதாக ஒருவர் மட்டுமே இதுவரை புகார் செய்துள்ளார்.

மேலும் படிக்க : முகநூலை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த வாட்ஸ்ஆப்

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp bug popular messaging app exposing personal chats to random strangers

Next Story
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை பின்னால் தள்ளி முதலிடம் பிடித்த வாட்ஸ்ஆப்…Whatsapp 5 hidden features,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X