Whatsapp Dark Mode Feature : ஆண்ட்ராய்ட், மற்றும் ஐ.ஓ.எஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப்பின் புதிய ஃபீச்சரான டார்க் மோட் விரைவில் வெளியாக உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இந்த புதிய ஃபீச்சரின் இறுதி கட்ட வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த டார்க்மோட் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Advertisment
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
எப்போது வெளியாகிறது டார்க் மோட்?
இந்த சிறப்பம்சங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதனால் தான் பீட்டா ஆப்பில் இதனை பயன்படுத்த இயலவில்லை. இவ்வளவு தாமதம் ஏன் என்று கேட்ட போது, பிரச்சனைகள் ஏதுமின்றி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
டார்க் மோட் என்றால் என்ன?
டார்க் மோட் என்பது மிகவும் லைட் - கலர்ட் எழுத்துகள் டார்க்கான பேக்-கிரௌவ்ண்டில் தெரிவது தான்.இது மொபைல் போன் திரையில் இருந்து வெளியாகும் வெளிச்சத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் கண்களுக்கு பிரச்சனை ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது. இந்த மோட், சூழலுக்கு ஏற்றவாறு சூழலை மாற்றி அமைக்கிறது. இது பேட்டரி பயன்பாட்டுனை ஓரளவுக்கு கட்டுக்குள் வைப்பதால் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக் கொள்ள இயலும்.