Whatsapp new update WhatsApp Fingerprint authentication : வாட்ஸ்ஆப் தங்களின் பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் என்றுமே முதன்மை வகித்து வருகிறது. குறிப்பாக அவர்களின் டேட்டாவை பாதுகாப்பதில். ஏற்கனவே ஐபோன்களில் இருக்கும் ஃபிங்கர் பிரிண்ட் வசதியை ஆண்ட்ராய்ட் போனுக்கும் கொண்டு வருவோம் என்று உறுதி அளித்திருந்தது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
Whatsapp new update WhatsApp Fingerprint authentication
தற்போது வாட்ஸ்ஆப்பின் பீட்டா பயனாளிகள் இந்த வசதியை அனுபவிக்கலாம். இந்த சேவையை பெறுவதற்கு நீங்கள் 2.19.221 என்ற அப்டேட்டினை முதலில் டவுன் லோட் செய்யுங்கள்.
மேலும் படிக்க : ஸ்மார்ட்போன் பேட்டரிகளுக்கு ரீப்ளேஸ்மெண்ட் ரெடி… கிராஃபைன் தான் புதிய எதிர்காலம்…
இந்த ஃபிங்கர் பிரிண்ட் லாக்கினை எனேபிள் செய்ய வாட்ஸ்ஆப் செட்டிங்கிற்கு செல்லுங்கள். பின்பு Account > Privacy > Fingerprint lock என்ற ஆப்சன்களில் சென்று ஃபிங்கர்பிரிண்ட் லாக் வசதியை பெற்றுக் கொள்ளுங்கள். ஆண்ட்ராய்டின் மார்ஷ்மாலோவ் அல்லது அதற்கும் அடுத்த வெர்ஷனில் மட்டுமே இந்த ஆப்சனை பெற இயலும்.
அதிலும் மூன்று ஆப்சன்கள் உள்ளன. ஃபிங்கர் பிரிண்ட் லாக் உடனே வேலை செய்ய வேண்டுமா, ஒரு நிமிடம் கழித்து வேலை செய்ய வேண்டுமா அல்லது அரை மணி நேரம் கழித்து வேலை செய்ய வேண்டுமா என இருக்கும் ஆப்சன்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஐ.ஓ.எஸ் ஆப்சனில் 15 நிமிடங்கள் என்ற ஆப்சன் இருக்கும். ஆனால் அது ஆண்ட்ராய்டில் இல்லை.
மேலும் படிக்க : சென்னைக்கு வந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…