Whatsapp group settings to avoid people adding you : வாட்ஸ்ஆப் எவ்வளவு உதவிகரமானதோ, அதே போன்று அது அத்தனை தொந்தரவுகளையும் தரக்கூடியது தான். குறிப்பாக நிறைய ஃபார்வர்ட் மெசேஜ்கள், தேவையற்ற க்ரூப்களில் நம்மை இணைத்துவிடுவது போன்ற பிரச்சனைகளில் நாம் மாட்டிக் கொள்வோம்.
ஃபேமிலி க்ரூப், ஸ்கூல் க்ரூப், காலேஜ் க்ரூப், ரீயூனியன் க்ரூப், வேலை செய்யும் இடங்களில் சில க்ரூப்கள் - எத்தனை என்று யோசிப்பதற்குள் தலையே சுற்றிவிடும். தேவையில்லாமல் மற்றவர்கள் நம்மை வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இணைப்பதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
Whatsapp group settings to avoid people adding you : Steps
முதலில் வாட்ஸ்ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளவும்
செட்டிங்ஸில் சென்று அக்கௌண்ட் ஆப்சனை தேர்வு செய்யவும்
அதில் ப்ரைவசி என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்
அதில் க்ரூப் என்ற தேர்வு வரும்
அதில் உங்களுக்கு மூன்று விதமான தேர்வுகள் இருக்கும்.
உங்களை யாரால் க்ரூப்பில் இணைக்க இயலும் என்று கேட்கப்பட்டு அதில் எவ்ரிஒன், மை காண்டாக்ட்ஸ், மற்றும் நோபடி என்ற ஆப்சன் இருக்கும்.
உங்களின் வட்டத்தில், உங்களுக்கு தெரிந்தவர்கள் மட்டுமே க்ரூப்பில் இணைக்க முடியும். அதுவும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நேரடியாக நோபடி என்ற ஆப்சனை க்ளிக் செய்து க்ரூப் தொல்லையில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுங்கள்.
மேலும் படிக்க : Whatsapp security features : இந்த ஆப்சன்களையெல்லாம் டிக் செய்யுங்க… தொல்லையில்லாம வாட்ஸ்ஆப் பயன்படுத்துங்க!