WhatsApp New Update Dark Mode : இந்த வருடம் புத்தம் புதிய அப்டேட்டுகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். அதில் மிக முக்கியமான அப்டேட்டாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது டார்க் மோட் தான். தற்போது அந்த புதிய அப்டேட்டின் கான்சப்ட் இமேஜ் வெளியாகியுள்ளது.
பெயருக்கு ஏற்றார் போலவே டார்க் மோடில் எப்படி இருக்கும் வாட்ஸ் ஆப் என்பதைத்தான் கான்செப்ட் இமேஜ் அறிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் முழுவதும் கறுப்பு வெள்ளைத் திரையாக காட்சி அளிக்கின்றது.
WhatsApp New Update Dark Mode - கான்செப்ட் இமேஜ்
திரை முழுக்க முழுக்க கறுப்பு நிறத்திலும் எழுத்துகள் மற்றும் ஐகான்கள் வெள்ளை நிறத்திலும் உள்ளது. விண்டோஸ்போனில் ஏற்கனவே டார்க் மோட் வேலை செய்யும். ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் மட்டும் தான் தற்போது மாற்றங்களை கொண்டு வருகிறது இந்த போன்.
ஏற்கனவே ட்விட்டர், யூடியூப், கூகுள் மேப் போன்றதில் ஏற்கனவே டார்க் மோட் ஆப்சன் உள்ளது. இந்த வருத்தில் பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சரிலும் வர உள்ளது டார்க் மோட். டார்க்மோட் உபயோகத்தால் உங்களால் 43% வரை செல்போன் பவரை மிச்சம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : 2019ம் ஆண்டில் வெளியாக இருக்கும் வாட்ஸ்ஆப் புது அப்டேட்கள்