Advertisment

WhatsApp Payment Service : கூகுள் 'பே’க்கு போட்டியாக வாட்ஸ்ஆப்பின் பேமெண்ட் சேவை... இந்தியாவில் எப்போது அறிமுகம்?

WhatsApp Payment Service Launch : தரவுகளை சேமிக்க போதுமான வசதிகளை செய்யாததின் விளைவாக அந்த திட்டம் தோல்வியை தழுவியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp Payment Service

WhatsApp Payment Service

WhatsApp Payment Service: WhatsApp to launch it very soon :  இந்தியாவில் பணபரிவர்த்தனைக்காக தினம் தினம் ஒவ்வொரு ஆப்கள் வெளியாகி வருகின்ற நிலையில், நம்பிக்கைக்கு உரியது எந்த வகையான செயலி என்பதை கண்டறியவே நமக்கு அதிக நாட்கள் ஆகிவிடும். இல்லையென்றால் ஒவ்வொரு வங்கிக்கும் தனியாக வங்கிக் கணக்கினை பெனஃபிசிரியில் இணைத்துவிட்டு அடுத்த பணப்பரிவர்த்தனை செய்ய மணிக்கணக்காக காத்திருக்கும் நிலையும் உருவாகிறது.

Advertisment

ஜிபே (GPay) ஒரு வகையில் நல்ல செயலி தான் என்றாலும், நமக்கு மிகவும் பரீட்சையமான வாட்ஸ்ஆப்பில் இந்த வசதி இல்லையே என்ற வருத்தமும் நிலவி வந்தது உண்மையே. நம்முடைய வருத்தத்தை உணர்ந்து கொண்ட வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த ஆண்டின் பிற்பாதியில் இது குறித்த அப்டேட்டினை வெளியிட்டதோடு WhatsApp payment வசதி மிக விரைவில் கொண்டுவரப்படும் என்றும் கூறியது.

WhatsApp Payment : அந்நிறுவனம் சந்தித்த பிரச்சனை என்ன?

ஆனால் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தேர்ட் - பார்ட்டி ஆடிட்டிங்கிறாக நிறுவனம் ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் இந்த நிறுவனம் மூலமாக மட்டுமே வாடிக்கையாளர்களின் அனைத்து தரவுகளும் இந்தியாவில் தான் சேமித்து வைக்கபப்ட்டிருக்கிறது என்பது நிரூபிக்க இயலும்.

ஆர்.பி.ஐயின் அறிவுரையின் படி, இந்த முடிவை எடுத்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். தங்களின் நிறுவனங்களை வாட்ஸ்ஆப் தேர்வு செய்ய வேண்டும் என்று CERT-IN மூலம் ஆடிட்டிங் நிறுவனங்கள் தங்களின் பெயர்களை இணைத்து வருகின்றன.  ஏப்ரல் மாதம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கூட்டமைப்பில் வாட்ஸ்ஆப் பே’வை செயல்படுத்தியது அந்நிறுவனம். ஆனால் தரவுகளை சேமிக்க போதுமான வசதிகளை செய்யாததின் விளைவாக அந்த திட்டம் தோல்வியை தழுவியது.

மேலும் படிக்க : WhatsApp New Updates : இந்த அப்டேட்டுகளுக்காகத் தான் இத்தனை நாளா வெய்ட்டிங்…!

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment