உங்கள் கைரேகை இருந்தால் தான் வாட்ஸ்ஆப் செயல்படும்… புதிய செக்யூரிட்டி அப்டேட்

தேவையற்ற க்ரூப்பில் நம்மை இணைத்துவிட்டு கடுப்பேற்றுவர்களிடம் இருந்து தப்பிக்க இது ஒரு சிறந்த முறையாக இருக்கும்.

By: Updated: October 1, 2019, 04:09:02 PM

WhatsApp Security features :  தங்களின் வாடிக்கையாளர்களின் தனிஉரிமை, ப்ரைவசி மற்றும் செக்யூரிட்டி இவை மட்டுமே வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு முக்கியம். அதில் அவர்கள் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை. தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் தற்போது புதிய பல அப்டேட்களை வழங்கி வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் (Fingerprint unlock)

வாட்ஸ்ஆப் ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் சிறப்பம்சங்கள் ஆப்பிளின் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ் அன்லாக் மூலமாகவும் வாட்ஸ்ஆப்பை செயல்படுத்த முயலும். உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள் அதில் ப்ரைவசியை தேர்வு செய்யுங்ஜள். பின்னர் பிங்கர்பிரிண்ட் லாக் என்ற வசதி இருக்கும் அதில் அன்லாக் வித் ஃபிங்கர் பிரிண்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்களின் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஃபேஸ்புக் ஸ்டோரியாக வாட்ஸ்ஆப் ஸேட்டஸை பகிர்வது எப்படி?

ஆண்ட்ராய்டின் 2.19.258 என்ற வெர்சனிலும், ஐபோனில் 2.19.92 என்ற வெர்சனிலும் இந்த அப்டேட் கிடைக்கிறது. வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பக்கத்தில் ஃபேஸ்புக் ஸ்டோரியாக ஷேர் செய்வதற்கான ஆப்சன் தற்போது வந்துள்ளது. ஏற்கனவே வாட்ஸ்ஆப், பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமை ஒன்றிணைக்கும் பணியில் ஃபேஸ்புக் குழுமம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா… அசத்தல் ஆஃபர்களை வழங்கும் பி.எஸ்.என்.எல்

உங்கள் நண்பர்களின் ஸ்டேட்டஸ்களை திருட்டுத் தனமாக பார்ப்பது எப்படி?

என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஒரு சில ஸ்டேட்டஸ்கள் ப்ரைவசி வைத்து யாருக்கு தேவையோ அவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் வைப்பதும் வழக்கம். நீங்கள் அவர்களின் ஸ்டேட்டஸ்களை பார்க்கின்றீர்கள். இருப்பினும் உங்களின் பெயர்கள் தெரியாமல் இருக்க என்ன செய்யலாம்? ப்ரைவசி ஆப்சனில் இருக்கும் ரீட் ரெசிப்ட்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்தால் உங்களின் பெயர் ஸீன் பை பட்டியலிலேயே இடம் பெறாது.

க்ரூப் இன்விடேசன்

உங்களின் விருப்பம் இல்லாமல் உங்களை இனி யாராலும் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இணைக்க இயலாது. இதற்கான செட்டிங்க்ஸ்லில் நோபடியை தேர்வு செய்தால், யாரும் உங்களை எந்த க்ரூப்பிலும் இணைக்க இயலாது. அந்த இன்விடேசன் ரெக்வஸ்ட்டும் மூன்றே நாட்களில் காலாவதி ஆகிவிடும். மை காண்டாக்ட்ஸ் என்றால், உங்கள் காண்டாக்ட்டில் இருக்கும் நபர்கள் உங்களை க்ரூப்பில் இணைக்க இயலும். தேவையற்ற ஒவ்வொரு க்ரூப்பிலும் நம்மை இணைத்துவிட்டு கடுப்பேற்றுவர்களிடம் இருந்து தப்பிக்க இது ஒரு சிறந்த முறையாக இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp security features fingerprint unlock facebook story status checking group chats

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X