அட இது நல்லா இருக்கே… குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாகவே அழிந்துவிடும் வாட்ஸ்ஆப் மெசேஜ்கள்!

எப்போது இந்த அப்டேட் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரும் என்ற தகவலை இன்னும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

By: March 16, 2020, 3:05:34 PM

WhatsApp self-destructing message feature available for Android beta users : ஒரு குறிப்பிட்ட மெசேஜ் வாட்ஸ்அப்பில் அனுப்பிய சில நிமிடங்களிலேயே தானாகவே அழிந்து விடும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது.  இதுவரை குரூப் மெசேஜ் அனுப்பும் போது மட்டுமே இந்த ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் ”டெலிட் ஃபார் எவ்ரிஒன்” என்ற ஆப்ஷனில் எவ்வளவு நேரத்துக்குள் அந்த மெசேஜ் டெலிட் ஆக வேண்டும் என்பதை செட் செய்ய முடியாது.

WhatsApp self-destructing message feature available for Android beta users WhatsApp self-destructing message feature available for Android beta users

தற்போது தனிநபர்கள் பயன்பாட்டில் தானாகவே அழிந்து போகக்கூடிய மெசேஜ் ஆப்ஷனை அறிவித்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். WABetaInfo இந்த புது அப்டேட் ஆண்ட்ராய்டு பீட்டா வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தது. ஆனால் இதனை நாங்கள் சோதனை செய்தபோது எங்களுக்கு அந்த அப்டேட் இன்னும் வரவில்லை.  இந்த ஆப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் கொன்ஞ்சமாக அப்டேட் செய்து வருகிறது.   எப்போது இந்த அப்டேட் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரும் என்ற தகவலை இன்னும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் படிக்க : இஸ்ரோவுடன் இணைந்த சியோமி… இந்த சிறப்பம்சம் வேறெந்த போனிலும் கிடையாது!

இந்த ஆப்சனை பெறுவது எப்படி ?

முதலில் நீங்கள் உங்களின் போனில் வாட்ஸ்ஆப் பீட்டா வெர்சனை அப்டேட் செய்யவும். அதில் தான் இந்த ஆப்சன் உள்ளது.

வைஃபை இணைப்பு சரியாக கிடைக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

அப்டேட் ஆனவுடன், வாட்ஸ்ஆப் சென்று, யாராவது ஒருவருக்கு மெசேஜ் அனுப்புங்கள்.

இந்த ஆப்சனை என்னேபில் செய்வதற்கு நீங்கள், அந்த நபரின் ப்ரொபைலை க்ளிக் செய்யவும். பின்னர் டெலிட் மெசேஜ் என்ற ஆப்சன் இருக்கும். அதனை க்ளிக் செய்யுங்கள். அதில் நீங்கள் அந்த மெசேஜ் எவ்வளவு காலம் அந்த சாட்டில் இருக்க வேண்டும் என்று தேர்வு செய்யுங்கள். 1 மணி நேரம், 1 நாள், 1 வாரம், 1 மாதம், ஒரு வருடம் என பல ஆப்சன்கள் அதில் உள்ளது. உங்களுக்கான ஆப்சனை நீங்கள் அதில் தேர்வு செய்து கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp self destructing message feature available for android beta users

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X