வாட்ஸ் ஆப் வதந்திகளை தடுக்க புதிய அப்டேட்: ஃபார்வேர்ட் தகவல்களை அறிய முடியும்

ஃபார்வர்ட் செய்யப்படும் குறுஞ்செய்திகளுக்கென புதிய லேபிள்கள் வர இருப்பதாக தகவல்

By: July 11, 2018, 3:52:45 PM

இனிமேல் உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றவர்கள் மூலம் ஃபார்வர்ட் செய்யப்பட்டதா, அல்லது அனுப்புநரின் சொந்த கருத்தா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் சமீபத்தில் வதந்திகள் மற்றும் தவறான வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதள செய்திகளின் மூலமாக நிறைய பிரச்சனைகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. சில இடங்களில் வதந்திகளால் கொலைகளும் நிகழ்ந்துள்ளன.

இதனை தடுப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டுமாறு சமூக வலைதள நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்தது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலி புதிய அப்டேட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.

whatsapp forward புதிய அப்டேட் மூலம் ஃபார்வர்ட் செய்திகளை எளிதில் கண்டறிய இயலும்

ஏற்கனவே க்ரூப் சாட்டில் அட்மின் மட்டுமே க்ரூப்பில் செய்தி பகிர முடியும் என்ற அப்டேட்டினையும் மிக சமீபத்தில் வெளியிட்டது வாட்ஸ்ஆப். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்ஷனில் வேலை செய்யும் வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்டினை வழங்கியிருக்கிறது.

அதன்படி உங்களுக்கோ அல்லது உங்கள் க்ரூப்பிற்கோ வரும் செய்தி ஃபார்வர்ட் செய்யப்பட்டதா அல்லது அனுப்புநரின் சொந்த செய்தியா/கருத்தா என்பதை கண்டறிய இயலும். ஃபார்வர்ட் செய்யப்படும் செய்திகளின் மேல் ஃபார்வர்ட் என்ற லேபிள் இருக்கும்.

வதந்திகள் மற்றும் தவறான செய்திகள் பரவுவதை தடுப்பதற்காக ஆராய்ச்சி செய்து, பிரச்சனைகளை சரி செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

இந்த புதிய அப்டேட் இன்னும் சில தினங்களுக்குள் வர உள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையினை மதிக்கிறோம் என்றும் குறிப்பிட்டது வாட்ஸ்ஆப்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp starts labelling forwarded messages for all users to cull virality of fake news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X