/tamil-ie/media/media_files/uploads/2018/05/whatsapp.jpg)
Whatsapp tips tricks, whatsapp, whatsapp security, whatsapp features, whatsapp latest features, whatsapp blue tick
வாட்ஸ் ஆப் செயலி ஒவ்வொரு முறையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அனைத்தையும் எளிமையாக மாற்றுவதற்காக புதிது புதிதாக அப்டேட்டுகளை கொண்டு வரும். அப்படியாக மிக சமீபத்தில் ஒரு அப்டேட் வந்துள்ளது.
வாட்ஸ் ஆப் செயலி, தற்போது 'மார்க் அஸ் ரீட்’ என்ற புதிய ஆப்சனை வாட்ஸ்ஆப் நோட்டிஃப்பிகேஷனில் தர இருக்கிறது. அதன்படி வாட்ஸ்ஆப் பயனாளிகள் தங்களுக்கு வந்திருக்கும் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தியினை படிக்காமலே Mark as Read கொடுத்துவிடலாம். நோட்டிஃபிக்கேஷன் பேனலில் இதுவரை ரிப்ளே என்ற ஒரு வசதி மட்டுமே இருந்தது குறிப்பிடத்தகக்து.
இந்த புதிய வசதி, வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன் 2.18.214ல் சோதனை முயற்சியில் இருக்கிறது என்றும், இன்னும் சில தினங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் WABetaInfoவில் தகவல் பரிமாறி உள்ளது. மார்க் அஸ் ரீடினைப் போலவே, நோட்டிஃபிக்கேஷன் பேனலில் இருந்தே 'ம்யூட்' muteம் செய்து கொள்ளலாம்.
சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் மூலம் வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக ஃபார்வர்ட் லேபிளை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us