நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 5 வாட்ஸ்ஆப் டிப்ஸ்கள்

உங்களின் வீடியோக்களை ஜிஃப் இமேஜாகவும் மாற்றிக் கொள்ள இயலும்

By: Updated: March 20, 2019, 05:46:02 PM

WhatsApp tips and tricks : நம்முடைய அன்றாட வாழ்வை மிகவும் எளிமையாகவும், தகவல் பரிமாற்றங்களை விரைவில் நடத்தவும் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான செயலிகளில் ஒன்று தான் வாட்ஸ்ஆப். இதில் இருக்கும் முக்கியமான ட்ரிக்குகள் சிலவற்றை நாம் அறிந்திருக்கவும் மாட்டோம். இந்த ட்ரிக்குகளை அறிந்தால் வாட்ஸ் ஆப் செயல்பாடுகள் இனி மிகவும் எளிமைதான்.

WhatsApp tips and tricks : Conversation Shortcuts

உங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருவர் அல்லது மூவர் தொடர்ந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்புவார்கள். தினமும் அப்படி தொடர்ச்சியாக வாட்ஸ் அனுப்பும் நபர்களின் காண்டாக்ட்டை நீங்கள் ஷார்ட் கட்டாக விண்டோஸில் சேமித்துக் கொள்ளலாம்.

சாட்டை ஹோல்ட் செய்தால் ஒரு பாப்-அப் உருவாகும். அதில் ஆட் காவெர்செஸசன் ஷார்ட்-கட் என்ற ஆப்சன் வரும். அதனை நீங்கள் க்ளிக் செய்தால் உங்களின் ஃபேவரைட் காண்டாக்ட் உங்களின் ஹோம் ஸ்கிரீனில்

Send WhatsApp messages with Siri or Google Assistant

நீங்கள் கூகுள் அசீஸ்டண்ட் அல்லது சிரி மூலமாக வாட்ஸ்ஆப் அனுப்பிட இயலும். சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட்டில் “Send a WhatsApp to Vishnu” என்று கூறினால் உங்களின் மெசேஜ் சென்றுவிடும்.

Stay selectively notified of conversations

உங்களுக்கு விருப்பமான நண்பர்களுக்கென தனியாக நீங்கள் நோட்டிஃபிகேசன் டோன் வைக்கலாம். அதற்கு, சாட் விண்டோவில் வரும் காண்டாக்ட் இன்ஃபோவை தேர்வு செய்தால் அதில் நீங்கள் கஸ்டம் நோட்டிஃபிகேசனை தேர்வு செய்துக் கொண்டு உங்களுக்கு பிடித்தமான பாடலை வைத்துக் கொள்ளலாம்.

Pin favourite chats

உங்களுக்கு விருப்பமானவர்களின் உரையாடலை பார்க்க, படிக்க ஏற்ற வகையில் நீங்கள் அந்த சாட்டை பின் செய்து கொள்ளலாம். அந்த சாட்டை லாங் ஹோல்ட் செய்தால் விண்டோஸ் மேற்பக்கம் மூன்று சிம்பள்கள் வரும். அதில் பின் சிம்பள் இருக்கும். அதை தேர்வு செய்தால் சாட்டிங் விண்டோவில் அந்த சாட் தான் முதலிடத்தில் இருக்கும்.

videos to GIFs

உங்களின் வீடியோக்களை ஜிஃப் இமேஜாகவும் மாற்றிக் கொள்ள இயலும். அட்டாச்மெண்ட் ஐகானை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான வீடியோவை இணைக்கவும். 6 நொடிகள் அல்லது அதற்கும் குறைவாக அந்த வீடியோவை கட் ச்செய்து ஜிஃப் ஐகானை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான். உங்கள் வீடியோ ஜிஃப்பாக மாறிவிட்டது.

மேலும் படிக்க : ஈ-காமர்ஸ் தளத்தில் அடியெடுத்து வைக்கும் இன்ஸ்டாகிராம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp tips and tricks you should know

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X