WhatsApp to stop working : வாட்ஸ்ஆப் ஜனவரி 1ம் (2019) தேதியில் இருந்து சில போன்களில் வேலை செய்யாது என்ற அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது. நோக்கியாவின் எஸ் 40 இயங்தளத்தில் இயங்கும் போன்களில் இனிமேல் வாட்ஸ்ஆப் வேலை செய்யாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்த தங்களின் அதிகாரப்பூர்வ பிளாக் ஸ்பாட்டில் வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது “நாங்கள் எடுக்கும் மிகவும் கடினமான முடிவு இது. ஆனால் உங்களின் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இருக்க இது போன்ற முடிவினை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டுமெனில் நீங்கள் உங்களின் போனை மாற்றியே ஆக வேண்டும். இனிமேல் இந்த இயங்குதளத்தின் கீழ் செயல்படும் போன்களில் வாட்ஸ்ஆப் செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்” என கூறியுள்ளது இந்நிறுவனம்.
மேலும் படிக்க : 2018ல் வாட்ஸ்ஆப்பில் வெளிவந்த சிறந்த அப்டேட்டுகள்
WhatsApp to stop working on Nokia Phones
S40யில் செயல்படும் போன்களில் வாட்ஸ்ஆப் செயல்பாட்டை நிறுத்த ஜூன் மாதமே முடிவு செய்திருந்தது. ஆனால் டிசம்பர் 31 (2018) வரை அந்த காலக்கெடுவினை நீட்டித்தது. (2017) கடந்த வருடம் பிளாக்பெர்ரி ஓ.எஸ், பிளாக்பெர்ரி 10, விண்டோஸ் 8.0, மற்றும் நோக்கியா S60 பிளாட் பார்ம்களில் செயல்படும் போன்களில் சேவையை நிறுத்தியது வாட்ஸ்ஆப்.
நோக்கியா 206 சிங்கிள் சிம், நோக்கியா 206 டபுள் சிம், நோக்கியா 208, நோக்கியா 301 (சிங்கிள் சிம் சாட் எடிசன், டபுள் சிம் சாட் எடிசன்), நோக்கியா 515, நோக்கியா ஆஷா 201, நோக்கியா ஆஷா 201 எடிசன், நோக்கியா ஆஷா 210, நோக்கியா ஆஷா 230 (சிங்கிள் மற்றும் டபுள் சிம்)
நோக்கியா ஆஷா சீரியஸ்ஸில் 300, 302, 303, 305, 306, 308, 309, 310, 311, 500, 501, 502, 503 போன்ற போன்களும் நோக்கியா சி3 - 00, நோக்கியா சி3-01, நோக்கியா X2-00, நோக்கியா X2-01,நோக்கியா X3-01, நோக்கியா X3-02.5 போன்ற போன்களிலும் இனி வாட்ஸ்ஆப் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.