வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது எப்படி?

How to Record WhatsApp Call on iPhone and Android: எளிமையான வழிமுறைகளில் ரெக்கார்ட் செய்ய இயலும்..,

WhatsApp Voice Call Recording Apps : ஒவ்வொருவரும் அலுவலக வேலைக்கு என்று செல்லும் போது, வேலை தொடர்பான அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவுகள், மற்றவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் மிக முக்கியமான தகவல்கள் என அனைத்தையும் நம்மால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவோ, அந்த நேரத்தில் பேனா – பேப்பரை எடுப்பதோ இயலாத காரியம்.

How to Record WhatsApp Call ?

இந்த வேலைகளை எளிமையாக்க வந்தது தான் கால் ரெக்கார்டர்கள். ஆனால் தற்போது மொபைல் பில்களை பார்த்தால் மனம் வலிக்கும் அளவிற்கு அவ்வளவு செலவாகிறது. மிக எளிமையாக குறைந்த செலவில் போன் பேச வாட்ஸ்ஆப் கால்களைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றோம். ஆனால் அதில் ரெக்கார்ட் வசதி பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா.? அதற்காகவே சில செயலிகள்  (WhatsApp Voice Call Recording Apps ) தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.

WhatsApp Voice Call Recording Apps  – ஆப்பிள் போன்களில் வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது எப்படி ?

உங்களின் ஐபோனை உங்களின் மேக்புக்குடன் லைட்னிங் கேபிள் வழியாக முதலில் இணைக்க வேண்டும்.

முதல்முறையாக இந்த வழிமுறையை நீங்கள் பயன்படுத்தினால் ட்ரஸ்ட் தி கம்ப்யூட்டர் என்று உங்களின் போனில் காட்டும் ஆப்சனை க்ளிக் செய்யவும்.

மேக்புக்கில் இருக்கும் குயிக்டைம்மை (QuickTime)ஐ அக்செஸ் செய்யவும்.

ஃபைல் என்ற ஆப்சனிற்கு கீழே நியூ ஆடியோ ரெக்கார்டிங் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

குயிக்டைம்மில் இருக்கும் ஆரோ பாயிண்ட்டை க்ளிக் செய்து, ஐபோனை தேர்வு செய்யவும்.

பின்பு குயிக்டைம்மில் தோன்றும் ரெக்கார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

இப்போது நீங்கள் வாட்ஸ் ஆப் காலில் உங்களின் நண்பர்களுக்கோ/மேலதிகாரிகளுக்கோ பேசி, அதனை ரெக்கார்ட் செய்து கொள்ளலாம்.

ஒரு முறை பேசி முடித்தவுடன், அழைப்பினை துண்டித்துவிட்டு குயிக்டைமில் ஆடியோவை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

WhatsApp Voice Call Recording Apps  – ஆண்ட்ராய்ட் போனில் கால் ரெக்கார்ட் செய்வது எப்படி ?

க்யூப் கால் ரெக்கார்டர் (Cube Call Recorder) என்ற ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.

Cube Call Recorder இந்த செயலியை பயன்பாட்டில் வைத்தபடியே வாட்ஸ்ஆப் விண்டோவிற்கு செல்லுங்கள். பின்பு நீங்கள் செய்யும் போன்கால் க்யூப் காலில் ரெக்கார்ட் ஆகும்.

எரர் காட்டினால், க்யூபா கால் ரெக்கார்டரில் இருக்கும் செட்டிங்கில் சென்று ஃபோர்ஸ் வி.ஓ.ஐ.பி. அஸ் வாய்ஸ் கால் (Force VoIP call as voice call) என்ற ஆப்சனை க்ளிக் செய்து பின்பு க்யூப் காலில் ரெக்கார்ட் செய்து கொள்ள இயலும்.

மேலும் படிக்க : புத்தம் புதிய அப்டேட்டுடன் வெளியான வாட்ஸ்ஆப் வெப் பிக்சர் – இன் – பிக்சர் மோட்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close