WhatsApp web PiP mode new update : வாட்ஸ் ஆப்பில் தற்போது மிகவும் பிரபலமான அப்டேட் எது என்று கேட்டால், நிச்சயம் அது பிக்சர் இன் பிக்சர் மோட் தான். இந்த அப்டேட் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், அதனின் நியூ வெர்ஷன் தற்போது வெளியாகியுள்ளது.
WhatsApp web PiP mode new update
வாட்ஸ்ஆப் செயலியின் நியூ வெர்ஷன் 0.3.2041 - ல் வாட்ஸ்ஆப் வெப் பிக்சர்-இன்-பிக்சர் மோடின் புதிய அப்டேட்டினைப் பெறலாம். இந்த அப்டேட்டின் மூலமாக யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளில் இருக்கும் வீடியோக்களை, அந்தந்த தளங்களுக்குச் செல்லாமல், வாட்ஸ்ஆப் விண்டோவிலே பார்த்து மகிழலாம்.
புதிய பிக்சர்-இன்-பிக்சர் மோடினை பெற பயனாளிகள் 0.3.2041 இந்த வெர்சனை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். உங்களின் கேச்சே மெமரியை க்ளியர் செய்து பயன்படுத்துவது நலம்.
பிக்சர்-இன்-பிக்சர் மோடில் இயங்கும் வீடியோக்களை ஷேர் செய்யவும், பாஸ் செய்யவும், அந்த வீடியோவை பார்த்துக் கொண்டே வேறொரு சாட்டிற்கும் பயனாளிகளால் செல்ல இயலும்.
மேலும் படிக்க : 2019ம் ஆண்டு வாட்ஸ்ஆப்பில் வர இருக்கும் புதிய அப்டேட்கள் என்ன ?