WhatsApp's new search feature: பயனர்கள் முக்கிய வார்த்தைகளைத் தங்கள் application ல் தேட வாட்ஸ்அப் அனுமதிக்கிறது, ஆனால் பயனர்கள் இதுவரை புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற media க்களை தேட வழி இல்லை. இந்த உடனடி குறுஞ்செய்தி தளம் அது போன்ற ஒரு அம்சத்துக்காக வேலை செய்கிறது என ஒரு புதிய beta update பரிந்துரைக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட தேடுதல் வெறும் media files க்கு மட்டுமல்ல, பயனர்கள் அரட்டையில் பகிறப்பட்டுள்ள இணைப்புகள் (links shared on the chat) மற்றும் documents போன்றவற்றையும் தேடலாம்.
Advertisment
iOS application ல் உள்ள beta version ல் இந்த புதிய அம்சம் கண்டுபிடிக்கப்பட்டது. அறிக்கையின்படி, பதிப்பு 2.20.117 புதுப்பிப்பு Advanced Search Mode உடன் வருகிறது. தற்போது WhatsApp beta பயனர்களுக்கு iOS ல் மட்டும் இந்த அம்சம் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு WhatsApp இந்த புதுப்பிப்பை மிக விரைவில் வெளியிடும்.
அரட்டையில் search filters மூலம் வெவ்வேறு file வகைகளை பயனர்கள் தேட முடியும். இந்த search filters வெவ்வேறு file வகைகளுக்கு பல்வேறு வண்ண குறியீடுகளில் இருக்கும். beta பதிப்பில் குறைந்தபட்சம் புகைப்படங்கள், ஆடியோ, GIF கள், ஆவணங்கள், web links மற்றும் வீடியோக்களைத் தேட முடியும் என்று அறிக்கையிலிருந்து நமக்கு தெரியவருகிறது.
அதிகப்படியான media பகிறப்படக்கூடிய பெரிய WhatsApp groups களுக்கு இந்த அம்சம் குறிப்பாக உதவியாக இருக்கும்.
உலகளாவிய நிகழ்வாக மாறியுள்ள கோவிட் -19 நோய் தொற்று காரணமாக WhatsApp தனது application ல் மாற்றம் செய்துவருகிறது. பெரும்பாலான பெரு நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காரணமாக வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
WhatsApp ல் ஒரு விடியோ அழைப்பு செய்வதற்கு தேவைப்படும் number of steps ஐ குறைத்து விடியோ அழைப்பின் செயல்முறையை எளிமைப்படுத்தவும் முயற்சி செய்துவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”