xiaomi 108mp camera smartphone : 48 எம்.பி. கேமராக்கள் என்ற அதிர்ச்சியில் இருந்தே வெளிவராத நிலையில் சியோமி நிறுவனம் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. மேலும் புகைப்பட ரசிகர்களை, கலைஞர்களை அசத்தும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது சியோமி நிறுவனம்.
மேலும் படிக்க : சியோமி 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
ஏற்கனவே 108 எம்.பி. செயல்திறன் கொண்ட கேமராவை அறிமுகம் செய்ய இருப்பதாக சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இந்நிலையில் அந்த 108 எம்.பி. கேமராவுடன், பின்பக்கத்தில் மேலும் சில டிவைஸ்கள் இணைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 108 எம்.பி. கேமராவுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் டுகானா(Tucana), ட்ராக்கோ (Draco), உமி (Umi), சிமி (Cmi) என்ற நான்கு டிவைஸ்கள் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய சென்சார்களை வெளியிட்டது. அதில் ISOCELL Bright HMX - என்ற இந்த சென்சாரில் 108 எம்.பி. செயல்திறன் கொண்ட புகைப்படங்களை உருவாக்க முடியும். எனவே இந்த கேமரா சென்சார் அதில் பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான போனை வெளியிடுவதாக மட்டுமே சியோமி நிறுவனம் அறிவித்துள்ளதே தவிர அந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும், அதன் பெயரென்ன, அதன் விலையென்ன போன்ற எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.