scorecardresearch

ரெட்மியின் ப்ளாக் ஃப்ரைடே சேல்ஸ் : 55 இன்ச் டிவி குறைந்த விலையில் விற்பனை!

டோல்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ் – எச்.டி சான்றிதழ் பெற்ற 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த டிவி.

Xiaomi Black Friday sale starts today
Xiaomi Black Friday sale starts today

Xiaomi Black Friday sale starts today : ப்ளாக் ஃப்ரைடே சேலை (Black Friday sales) அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். வருகின்ற 2ம் தேதி முதல் Mi.com , அமேசான் மற்றும் எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் இந்த சேல் அறிமுகமாக உள்ளது. இந்த சேலில் 55 இன்ச் Mi TV 4X ஸ்மார்ட் டிவியை ரூ. 34,999-க்கு வாங்கிக் கொள்ளலாம். ஜனவரி 31ம் தேதிக்கு முன்பு இந்த ஸ்மார்ட்டிவியை வாஙினால் நான்கு மாதங்களுக்கான ஏர்டெல் டி.டி.எச் சேவையை ரூ. 1800 தள்ளுபடி விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

Mi TV 4X (55) 2020 Edition சிறப்பம்சங்கள் என்ன?

4கே, 10 பிட் எச்.டி.ஆர் திரையுடன் வெளியாக உள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

டோல்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ் – எச்.டி சான்றிதழ் பெற்ற 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த டிவி.

ஆண்ராய்ட் டிவி 9.0 இயங்கு தளத்தின் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப், க்ரோம்காஸ்ட், கூகுள் பிளே ஸ்டோர், மற்றும் டேட்டா சேவர் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..

பேட்ச்வால் 2.0 யூசர் இண்டெர்ஃபேஸூடன் இயங்குவதால் வாடிக்கையாளர்களால் 4கே கண்டெண்ட்டுகளை பெற்றிட இயலும். நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோ மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளை ரசிக்க ஏதுவாக இந்த டிவி அமைந்துள்ளது.

சியோமி 16 கண்டெண்ட் ப்ரோவைடர்களின் நிகழ்ச்சியை தொகுத்து தருகிறது. அதே போன்று 7 மொழிகளில் 7 செய்தி சேனல்களையும் வழங்குகிறது இந்த டிவி.

இந்த டிவி மட்டும் இல்லாமல் ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ, எம்.ஐ. ஏ3, போக்கோ எஃப்1 ஸ்மார்ட்போன்களின் விலையையும் அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளது ரெட்மீ நிறுவனம்.

மேலும் படிக்க : ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தையே மாற்றும் ஃப்ளிப்கார்ட்டின் புதிய கண்டுபிடிப்பு!

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Xiaomi black friday sale starts today new mi tv 4x 2020 edition launched