Xiaomi Mi 4th Anniversary Sale Deals: இந்தியர்களுக்கான தலைசிறந்த பட்ஜெட் போன்களை வழங்கி வந்து, இந்தியர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது சியோமி. சீனாவின் சியோமி நிறுவனம் இந்தியாவில் கால்பதித்து இன்றுடன் நான்கு வருடங்கள் முடிகின்றன. இந்த நான்காம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்காக சியோமி, எஸ்.பி.ஐ (SBI), பேடிஎம் (Paytm), மற்றும் மொபிவிக்(Mobiwik) போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.
எஸ்.பி.ஐ கிரெடிட் கார்ட் மூலமாக ரூ.7500க்கு பொருட்கள் வாங்கினால் ரூ. 500 தள்ளுபடி. பேடிஎம் பயன்படுத்தி 9000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் ரூ. 500 கேஷ் பேக் மற்றும் விமான போக்குவரத்திற்கு பதிவு செய்தால் 1000 ரூபாய் தள்ளுபடியும், திரைப்பட டிக்கெட்களுக்கு ரூ. 200 தள்ளுபடியும் செய்கிறது பேடிஎம். மொபிவிக் மூலமாக பொருட்கள் வாங்கினால் 25% கேஷ் பேக் கிடைக்கும்.
நான்கு ரூபாய்க்கு ஃப்ளாஷ் சேல்
தன்னுடைய அதிகாரப்பூர்வ இணைய தளமான mi.comல் ஜூலை 10 முதல் 12 தேதி வரை மாலை நான்கு மணிக்கு ஃப்ளாஷ் சேல் நடக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது சியோமி நிறுவனம். இன்று மாலை 4 மணிக்கு ரெட்மி நோட் 5க்கான ஃபளாஷ் சேல் நடக்கும். நாலை மாலை ரெட்மி Y2 மற்றும் மை பேண்ட் 2விற்கான ஃப்ளாஷ் சேல் நடைபெறும்.
சிறப்புச் சலுகைகள்
ஃப்ளாஷ் சேல் மட்டுமின்றி சில சிறப்பு சலுகைகளை அளித்திருக்கிறது சியோமி நிறுவனம். ரூ. 29,999க்கு விற்பனையான மை மிக்ஸ் 2வின் விலை தற்போது ரூ. 27,999. ரூ. 15,999க்கு விற்பனையான மை மேக்ஸ் விலை தற்போது ரூ. 14,999 மட்டும். சில பொருட்களுக்கு காம்போ சலுகையும் அளித்திருக்கிறது சியோமி.
அதே சமயத்தில் ரெட்மி நோட் 5 புரோ, ரெட்மி Y2, எல்.இ.டி ஸ்மார்ட் டிவி ஆகியவற்றையும் குறைந்த விலைக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் விற்பனை செய்ய இருக்கிறது சியோமி.
காம்போ சலுகைகள் (Combo Offer)
ரெட்மி நோட் 5 மற்றும் மி விஆர் ப்ளே 2 (Mi VR Play 2) இரண்டையும் சேர்த்து ரூ. 9999க்கு விற்பனை செய்ய உள்ளது.
ரெட்மி Y1ன் மற்றும் மி ப்ளூடூத் ஹெட்செட் (Mi Bluetooth Headset) இரண்டையும் சேர்த்து ரூ. 8,999க்கு விற்பனை செய்கிறது.
ஜூலை 10-12 தேதிகளில் மாலை 6 மணிக்கு மட்டும் நடைபெறும் இந்த காம்போ சேலில் ரெட்மி பாக்கெட் ஸ்பீக்கர் மற்றும் இயர்போன்ஸ் ஆகியவற்றின் காம்போ விலை ரூ, 1499 மட்டுமே.
ரூ. 600க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ.50, ரூ. 100, ரூ. 200 மற்றும் ரூ.500 வரையிலான பரிசுக் கூப்பன்களையும் அளிக்கிறது சியோமி நிறுவனம்.