ஆண்ட்ராய்ட் பை பீட்டா வெர்ஷனில் வேலை செய்யும் சியோமி மை A2

புதிய அப்டேட்டினை வெளியிட்டது சியோமி நிறுவனம்

Xiaomi Mi A2 Android Pie beta update
Xiaomi Mi A2 Android Pie beta update

Xiaomi Mi A2 Android Pie beta update : சியோமி மை A2 ஸ்மார்ட்போன் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியானது. ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்தினை மையமாகக் கொண்ட ஆண்ட்ராய்ட் ஒன் இயங்கு தளத்தில் செயல்படுமாறு வெளியானது இந்த போன்.  தற்போது இந்த போனின் இயங்குதளத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்குதளத்தினை தற்போது சியோமி மை A2 ஸ்மார்ட்போனில் அப்டெட் செய்து கொள்ளலாம்.

Xiaomi Mi A2 Android Pie beta update

அடாப்டிவ் பேட்டரி, நேவிகேஷன், மற்றும் இதர செயலிகளை மிகவும் சிறப்பாக இதில் செயல்படுத்த இயலும். பீட்டா வெர்சனில் இருந்து ஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்தில் முழுமையாக செயல்படும் என்று சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது.

சியோமி மை A2 சிறப்பம்சங்கள் : வடிவமைப்பு மற்றும் திரை

தொடுதிரை ஃபார்மெட் விகிதம் 18:9 ஆகும். 5.99 இன்ச் உள்ள தொடுதிரையில் பெசல் வித் மிகவும் குறைவு. நிறங்கள்: கறுப்பு, நீலம், மற்றும் தங்க நிறங்களில் இந்த அலைபேசி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12 எம்பி மற்றும் 20 எம்பி என்ற ரீதியில் இரண்டு பின்பக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரண்டிற்கும் மத்தியில் எல்இடி ஃப்ளாஷ் லைட் இருக்கிறது. முகப்பு கேமராவின் ரெசொலியூசன் 20 எம்.பி ஆகும்.

ப்ரோசஸ்ஸர், பேட்டரி, மற்றும் மெமரி

ஸ்னாப்ட்ராகன் 660 ப்ரோசஸ்ஸர் 4ஜிபி RAM அல்லது 6ஜிபி RAM உடன் இணைந்து செயல்படும். 3,010mAh பேட்டரி, மற்றும் யுஎஸ்பி சி சார்ஜ் போர்ட்டினை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இந்த அலைபேசி இயங்கும்.  இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழுமையான செய்திகளைப் படிக்க

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Xiaomi mi a2 android pie beta update spotted online

Next Story
அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜியோ… ரூ.500 விலையில் 4ஜி வோல்ட்இ போன்?Jio, Reliance jio, Feature phone,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com