/tamil-ie/media/media_files/uploads/2019/03/D1rC2oMX0AAM-PX.jpg)
Xiaomi Redmi Go
Xiaomi Redmi Go launch : பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உருவாகி வருகிறது சியோமியின் ரெட்மி கோ ஸ்மார்ட்போன். சியோமி நிறுவனத்தின் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் தான், சியோமியின் முதல் ஆண்ட்ராய்ட் கோ போன் ஆகும். இந்த போன் வருகின்ற 19ம் தேதி வெளியாகிறது. புது டெல்லியில் காலை 11:30 மணிக்கு அறிமுகமாகிறது.
Xiaomi Redmi Go launch and Special Features
இந்த எண்ட்ரி லெவல் போனில் 1ஜிபி ராம் மற்றும் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளம் உள்ளது. இதில் ஜிமெயில் கோ, அசிஸ்டட்ண்ட் கோ, மேப்ஸ் கோ போன்ற செயலிகள் ப்ரி இன்ஸ்டால் செய்யப்பட்டே வெளி வருகின்றன.
ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமான இந்த போனின் விலை வெறும் 80 யூரோக்கள் மட்டுமே. இந்திய ரூபாய் கணக்கில் 6500 ஆகும்.
ப்லிபைன்ஸ் நாட்டில் இந்த விலை 3,990 பி.எச்.பி ஆகும். இந்திய ரூபாய்ப்படி 5,426 ஆகும். இந்த போன் ரூ.5000 முதல் ரூ.6000க்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 இன்ச் எச்.டி. திரை
அஸ்பெக்ட் ரேசியோ 16:9
மெட்டாலிக் கேசிங் டிசைன்
இரட்டை மைக்ரோ போன் மற்றும் பாட்டம் ஃபேசிங் ஸ்பீக்கர் ஆகியவை அதில் பொருத்தப்பட்டுள்ளது.
8ஜிபி இண்டெர்நெல் ஸ்ட்றெஜ்
நீலம், கறுப்பு, மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த போன் வெளியாக உள்ளது.
3,000mAh சேமிப்புத் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
10 மணி நேரம் பேட்டரி லைஃப் தருகிறது.
மேலும் படிக்க : வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுமா சோனி ஆல்பா 6400 ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.