சியோமி ரெட்மி தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. பட்ஜெட் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சியோமி ரெட்மி கோ (Xiaomi Redmi Go) போனின் விலை 80 யூரோக்கள். இந்திய ரூபாய் மதிப்புப் படி 6500 ரூபாய்.
முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் வெளியாக உள்ளது. பின்பு உலக அளவில் விற்பனைக்கு வர உள்ளது. ரெட்மி கோ, தற்போது விற்பனையில் இருக்கும் சாம்சங் ஜே4 கோர், நோக்கியா 1, மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ போன்ற போன்களுக்கு கடுமையான சவால்களை உருவாக்கும் போனாக வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சான்றிதழ்களையும் இந்த போன் வாங்கியிருப்பதால், சிங்கப்பூரில் முதன் முறையாக விற்பனைக்கு வர உள்ளது சியோமி போன்கள்.
மேலும் படிக்க : சியோமி நோட் 7 போனின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை
Xiaomi Redmi Go போனின் சிறப்பம்சங்கள்
1ஜிபிக்கும் குறைவான ரேம்மை கொண்டுள்ளது இந்த போன்.
1ஜிபிக்கும் குறைவான ரேம் மெமரியைக் கொண்டிருப்பதால், ஆண்ட்ராய்ட் கோ இயங்குதளத்தில் இந்த போன் வேலை செய்ய உள்ளது.
ஸ்நாப்ட்ராகன் 425 ப்ரோசசரும், ஆட்ரெனோ 308 கிராபிக்ஸ் ப்ரோசசர் யூனிட்டும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
இன்பில்ட் மெமரி 8ஜிபியாகும். மெமரி கார்ட் மூலமாக 128ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
பேட்டரி செயல் திறன் 3,000mAh
Xiaomi Redmi Go கேமரா
8 எம்.பி ரியர் கேமராவையும், 5 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டிருக்கிறது இந்த போன். பின்பக்க கேமராவில் எல்.ஈ.டி ஃபிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது.
அளவு : 140.4×70.1×8.35mm
எடை : 137 கிராம்கள்
நிறங்கள் : கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.