Advertisment

ரெட்மி நோட் 6 ப்ரோ Vs நோட் 5 ப்ரோ : எது சிறந்த போன்?

ஏற்கனவே நீங்கள் நோட் 5 ப்ரோ வைத்திருந்தால் இந்த போன் உங்களுக்கானது அல்ல.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Xiaomi Redmi Note 6 Pro

Xiaomi Redmi Note 6 Pro

Xiaomi Redmi Note 6 Pro : மிக சமீபமாக மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் நிறுவனம் என்றால் அது ரெட்மியாகத்தான் இருக்க வேண்டும். ஆரம்ப காலக்கட்டங்களில் வெளியான ரெட்மீ போன்கள் திடீர் திடீரென வெடித்து, வாடிக்கையாளர்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியது.

Advertisment

ஆனால் தற்போது, முந்தைய கால தொழில்நுட்ப தவறுகளில் இருந்து தங்களை சரி செய்து கொண்டு, வாடிக்கையாளர்களின் சேவையை சரியாக கணித்து, அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது ரெட்மி. சியோமியின் ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ மக்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற தற்போது நோட் 6னை அறிமுகப்படுத்தியது சியோமி நிறுவனம்.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ (Xiaomi Redmi Note 6 Pro)  சிறப்பம்சங்கள்

6.26 அங்குல ஃபுல் எச்.டி திரை மற்றும் இதன் ஸ்க்ரீன் ஃபார்மட் ரேசியோ 19:9 ஆகும். 636 ஸ்நாப்ட்ராகன் சிப்செட்டுடன் வெளியாகிறது இந்த போன். இதன் இயங்குதளம் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ. 4ஜிபி / 64ஜிபி மற்றும் 6ஜிபி/64ஜிபி என்ற இரண்டு வேரியேசன்களுடன் வெளியாகிறது இந்த போன்கள். ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி வேலை செய்கிறது நோட் 6 ப்ரோ ?

நோட் 5 ப்ரோவுடன் ஒப்பீடு செய்கையில் நோட் 6 திரையின் அளவும் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ அதிகமாகவும் இருக்கிறது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மற்றும் இரட்டை சிம்கார்ட்கள் போடுவதற்கான வசதியை கொண்டுள்ளது இந்த போன். ரெட்மீ போன்கள் என்றாலே சூடாகும் என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ரெட்மி நோட் 6 ப்ரோ.

மல்ட்டி டாஸ்கிங் செய்யும் போது கூட போன் சூடாவதில்லை என்பது இதன் ப்ளஸ் பாய்ண்ட். ஆண்ட்ராய்ட் 9.0 வெர்ஷன் வெளிவந்திருக்க்கும் இந்த சூழலில் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோவுடன் வெளியாகியிருப்பது சற்று வருத்தம் தருகிறது. காரணம், இந்த சமயத்தில் வெளியாகும் அனைத்து போன்களும் நோட் 6 ப்ரோவினை விட விரைவாக ஒரு வேலையை செய்யும் என்பது உண்மை.

கேமரா எப்படி இருக்கிறது ?

இந்த போனில் இரட்டை பின்பக்க கேமராக்கள் மற்றும் முன்பக்க கேமராக்கள் உள்ளன. பின்பக்க கேமரா செயல்திறன் 12MP+5MP ஆகும். செல்பி கேமராக்கள் செயல்திறன் 20MP+2MP.

நோட் 5 ப்ரோ வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் அதன் கேமரா மற்றும் புகைப்படத்தின் குவாலிட்டி தான். நோட் 6 என்பது, நோட் 5ன் அடுத்த வெர்சன் என்பதால், இன்னும் சிறப்பான புகைப்படங்களை எதிர்பார்த்தோம். ஆனால் அப்படியான ஒரு எதிர்ப்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.

Xiaomi Redmi Note 6 Pro Xiaomi Redmi Note 6 Pro வில் எடுக்கப்பட்ட புகைப்படம்

செல்பி கேமராவும் சிறப்பாகவே வேலை செய்கிறது. ஆனால் எம்.ஐ. ஏ2 அளவிற்கு அதனுடைய பெர்பார்ம்னஸ் இல்லை.

பேட்டரி

நோட் 6 ப்ரோவின் பேட்டரி சேமிப்புத் திறன் 4000 mAh ஆகும். ஒரு நாள் முழுவதும் தாக்குப்பிடிக்கும். இதனை நம்பி நீங்கள் நிச்சயமாக நேவிகேசன், வாட்ஸ்ஆப் போன்றவற்றை நாள் முழுமைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த போனை வாங்கலாமா ?

ஏற்கனவே நீங்கள் நோட் 5 ப்ரோ வைத்திருந்தால் இந்த போன் உங்களுக்கானது அல்ல. ரெட்மீ நோட் 3, 4, 5, மற்றும் 5ஏ வைத்துக் கொண்டு அப்கிரேட் லெவல் வேண்டுபவர்களுக்கு மட்டுமே சரியான தேர்வாக இருக்கும் இந்த போன்.

மேலும் படிக்க : பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தும் இண்டெர்நெட் டெலிபோனி சேவை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment