/tamil-ie/media/media_files/uploads/2019/08/ECfaW7rU8AIAj5W.jpg)
Redmi Note 8 Pro camera
Xiaomi Redmi Note 8 Pro pre booking reaches 15 lakhs :ம்ஆகஸ்ட் 29ம் தேதி ரெட்மி நோட் சீரியஸில் புதிய ஸ்மார்ட்போன்கள் வர உள்ளன. இது குறித்த அறிவிப்புகள் வெளியான உடனே அப்படி ஒரு மகிழ்ச்சி வாடிக்கையாளர்கள் மத்தியில். ஏன் என்றால், வெளிவர இருக்கும் ரெட்மீ நோட் 8 சீரியஸ் போன்களில் 64 எம்.பி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Xiaomi Redmi Note 8 Pro pre booking reaches 15 lakhs
பட்ஜெட் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு தான் நோட் சீரியஸ்கள் வெளியிடப்பட்டன. நோட் 5 ப்ரோ வெளியான பின்பு சியோமியின் மார்க்கெட் வேல்யூ வெற லெவலை அடைந்ததை யாராலும் மறுக்க இயலாது. ஆனாலும் அதன் பின்பு அந்த சீரியஸில் வந்த நோட் 6 ப்ரோ மற்றும் நோட் 7 ப்ரோ அந்த அளவிற்கு மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை.
மேலும் படிக்க : ஆண்ட்ராய்ட் க்யூ அப்டேட்களை பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்
அதனால் தான் தற்போது வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்புகள் அதிகமாகியுள்ளன. சீனாவில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு துவங்கி ஒரே நாளில் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்புகளின் படி இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரியினையும், 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியினையும் கொண்டுள்ளது. MediaTek Helio G90T ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 64 எம்.பி. குவாட் கேமரா செட்டப் 25 மடங்கு ஸூம் செய்து புகைப்படங்களை எடுக்கும் திறன் பெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.