YouTube Feature: பயனர்கள் இரவில் வீடியோக்களைப் பார்ப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் கூகுளுக்கு சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. படுக்கை நேர நினைவூட்டல் (Bedtime Reminders) என்ற இந்த புதிய அம்சம் பயனர்கள் இரவில் தாமதமாக வீடியோக்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டு படுக்கைக்கு செல்ல அறிவுறுத்தும்.
இந்த அம்சம் ஆண்ட்ராய்ட் மற்றும் iOS ஐ அடிப்படையாக கொண்ட கைபேசிகளில் கிடைக்கிறது, மேலும் இது அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக வரும் நாட்களில் வெளியிடப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த அம்சம் கைபேசிகளில் மட்டுமே கிடைக்கிறது.
5 வருடங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் தான்... மார்க்கின் அதிரடியால் ஆடிப்போன ஊழியர்கள்
யூடியூபின் படுக்கை நேர நினைவூட்டல் (bedtime reminders) எவ்வாறு வேலை செய்கிறது ?
இந்த அம்சத்தின் உதவியோடு பயனர்கள் வீடியோக்கள் பார்ப்பதை நிறுத்த நினைவூட்ட விரும்பும் குறிப்பிட்ட நேரங்களை முன்கூட்டியே அமைத்துக் கொள்ளலாம். யூடியூப் கைபேசி ஆப்பில் உள்ள settings tabல் தொடக்கம் மற்றும் முடியும் நேரத்தை (start and end times) முன்கூட்டியே அமைத்துக் கொள்ளலாம்.
ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நினைவூட்டல் வந்தால் அதை புறக்கணிக்கும் போக்கையும் இந்த அம்சம் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. எனவே ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் போது அதன் நடுவில் நேர நினைவூட்டலை அனுப்ப வேண்டுமா அல்லது அவர்கள் பார்க்கும் வீடியோ முடிவடையும் வரை காத்திருக்க வேண்டுமா என்பதை பயனரே தேர்வு செய்து குறிப்பிட அனுமதிக்கும் ஒரு விருப்ப தேர்வும் உள்ளது.
இந்த அம்சத்தை யூடியூப் Settings ல் ‘Remind me when it’s time for bed’ என்று காணலாம். பயனர்கள் இந்த அம்சத்தை எளிதாக பின்னர் on அல்லது off என்று மாற்றியமைத்துக் கொள்ளலாம். மேலும் நினைவூட்டலை எப்போது துவங்க வேண்டும் எப்போது முடிக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக் கொள்ளலாம். பயனரின் profile picture ஐ சொடுக்கி ‘Time Watched’ என்பதை தட்டுவதன் மூலமும் இந்த அம்சத்தை குறுக்கு வழியில் (short cut) அணுகலாம்.
தமிழ்நாடு ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல். தினமும் 1.8 ஜி.பி. காம்போ... மிஸ் பண்ணாதீங்க!
ஒரு வீடியோவை பார்த்து முடித்த பிறகு நினைவூட்டலை காண்பிப்பதற்கு பயனர் ‘Wait until I finish my video to show reminder’ என்ற விருப்ப தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அலாரம் மாதிரியான இதை பயனர்கள் snooze செய்யவோ அல்லது புறக்கணிக்கவோ (dismiss) முடியும். இயல்பாக snooze நேரம் 10 நிமிடங்கள் என அமைக்கப்பட்டிருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil