103-year-old woman celebrates with beer after beating COVID-19 : யு ஆர் ராக்கிங் பாட்டி அப்டின்னு சொல்ற மாதிரி ஒரு இந்த பாட்டி பண்ண காரியத்தை பாருங்க. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பலியாகியுள்ளனர். ஆனால் நம்பிக்கை தரும் வகையில் அதிக எண்ணிக்கையில் வயதானவர்களும் இந்த நோயில் இருந்து குணமாகி வருகின்றனர்.
Advertisment
ஷெல்லேய் கன் அவருடைய பாட்டி பற்றி கூறும் போது, பாட்டி எப்போதும் இப்படித்தான். அவர் அவ்வளவு சீக்கிரம் போராட்டத்தை விட்டுவிடுவதில்லை. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளார்.
வில்ப்ராஹாம் லைஃப் கேர் செண்டர் நர்சிங் ஹோமில் முதன்முறையாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட முதல் பெண் ஜென்னி ஸ்டெஞ்னா என்ற 103 வயது பாட்டி தான். மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடைய பேத்தி, அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்று ஈஸ்டோனில் இருந்து வாஷிங்க்டன் வந்திருக்கிறார். அனைவரும் அவருக்கு இறுதியாய் குட்பாய் சொல்ல வந்தனர். ஆனால் பாட்டியோ 13ம் தேதியில் இருந்து மெல்ல மெல்ல குணம் அடைய துவங்கியது பாட்டியின் உறவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்த பிறகு, ஜென்னி என்ன செய்தார் தெரியுமா, ஜில்லுனு ஒரு பியர் சாப்பிட்டு சாவை வென்ற தைரியத்தை கொண்டாடினார். இந்த ஸ்பிரிட்டும் பாஸிட்டிவிட்டியும் தான் தற்போது எல்லாருக்கும் தேவை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“