29 year old gives corona feast to his friends and gets arrested : கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குதற்கு மட்டும் வெளியே வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் இந்த ஊரடங்கினை சரியாக கடைபிடித்து வருகின்றனர்.
ஆனால் ஒரு சிலர் ஊருக்கு வெளியே, காடுகள், மலைப்பகுதிகளில் நண்பர்களுடன் கும்பலாக சேர்ந்து கேரம்போர்ட் விளையாடுவது, கறி விருந்து சமைத்து சாப்பிடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : ஜல்லிக்கட்டு களமான கேரம் போர்டு; தெறிக்கவிடும் திருப்பூர் போலீசாரின் ட்ரோன் வீடியோ
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கபிஸ்தலம் பகுதியில் 29 வயது இளைஞர் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் அருகே இருக்கும் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கறி விருந்து கொடுத்துள்ளார்.
வாழை இலைகளை ஒன்றன் அருகே ஒன்றாக, இடைவெளி ஏதும் இன்று விரித்து, அதில் சாப்பிட்டினை மொத்தமாக கொட்டி, நெருங்கி நெருங்கி அமர்ந்து, சாப்பிட்டினை அடித்து, குழைத்து, கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமூக இடைவெளியின் தேவை என்ன என்பதை அவர்கள் முற்றிலும் அறிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அது மிகவும் அப்பட்டமாக தெரிகிறது.
சாப்பிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதனை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவும் செய்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் “கொரோனா விருந்து” அளித்த அந்நபரை கைது செய்துள்ளது.
மேலும் படிக்க : Corona Updates Live : நாட்டின் பொருளாதார நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”