நடிகர் விஜயிடம் நீங்க எத்தானவது வரை படிச்சு இருக்கீங்க என சிறுவன் ஒருவன் கேட்கும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: ‘விஜயகாந்த் படத்தில் ரேவதி ரோலில் நடிக்க வந்த அழைப்பு; அப்புறம்…’: அனிதா குப்புசாமி சீக்ரெட்ஸ்
இந்தநிலையில், நம்முடன் விஜய் என்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பழைய வீடியோ கிளிப் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் பெரிய ஹீரோவாக வளர்ந்து வரும் நேரத்தில், திருமணத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ அது.
அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் விஜயிடம், நீங்க எத்தனாவது வரைக்கும் படிச்சு இருக்கீங்க என்று கேட்கிறான். இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத விஜய் சிரித்தவாறே, நான் வந்து பி.எஸ்சி முதலாம் ஆண்டு வரை படித்தேன். அதுக்கு அப்புறம் ஏறலப்பா, வந்துட்டேன் என கூறினார். பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அந்த சிறுவனிடம் நீங்க என்ன படிச்சிருக்கீங்க என கேட்க, நான் மூன்றாவது படிக்கிறேன் என கூறுகிறார்.
அடுத்ததாக ரசிகை ஒருவர் விஜயிடம், உங்க கல்யாணம் எப்போ? உங்க வருங்கால மனைவி சங்கீதா பற்றி ரசிகர்களிடம் கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்கிறார். அதற்கு விஜய், என்னுடயை கல்யாணம் அடுத்த ஆண்டில் இருக்கும். எப்ப என்று சரியா தெரியல என்கிறார்.
மேலும், என்னுடயை வருங்கால மனைவி சங்கீதா பற்றி சொல்லும்னா என வெட்கப்பட்டவாறே தயங்க, ஏதாவது சொல்லுங்க என ரசிகை கேட்கிறார். அப்போதும் விஜய் வெட்கப்பட்டு சிரித்தவாறு நிற்க, வெட்கப்படாம சொல்லுங்க, அப்பா இருக்கார்னு பயப்படுகிறார் போல என தொகுப்பாளர் கூறுகிறார்.
அதற்கு விஜய், நான் ஏன் எங்க அப்பா இருக்கார்னு பயப்படணும், எங்க அம்மா அப்பா பார்த்துவச்ச பொண்ணு தானே என சிரிக்கிறார். இதைகேட்டு கீழே அமர்ந்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட அரங்கமே சிரித்தது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil