தளபதி விஜய் கொஞ்சிட்டு இருந்த குழந்தை யாருடையது தெரியுமா?

நடிகர் விஜய் தனது மடியில் ஒரு குழந்தையை வைத்து கொஞ்சிய வீடியோ வைரலானது. அந்த குழந்தை யாரென்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள படம் சர்கார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து மற்ற வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், விஜய் சற்று ரிலேக்ஸ்…

By: Updated: October 25, 2018, 01:27:31 PM

நடிகர் விஜய் தனது மடியில் ஒரு குழந்தையை வைத்து கொஞ்சிய வீடியோ வைரலானது. அந்த குழந்தை யாரென்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள படம் சர்கார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து மற்ற வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், விஜய் சற்று ரிலேக்ஸ் ஆகி வருகிறார்.

நடிகர் விஜய் குழந்தை கொஞ்சும் வீடியோ :

இந்நிலையில், அவர் தனது மடியில் ஒரு குழந்தையை வைத்து கொஞ்சி விளையாடும் வீடியோ நேற்று முழுவதும் இணைத்தளத்தில் வைரலானது.  இந்த வீடியோவை பலரும் தங்களின் சமுக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

குழந்தையோடு குழந்தையாக மாறிய சர்கார் தளபதி… க்யூட் வீடியோ

அக்குழந்தை யாரென்ற தகவலும் தற்போது பரவி வருகிறது. விஜயின் நெருங்கிய நண்பரான சின்னத்திரை நடிகர் சஞ்சீவ்வின் உறவினர் குழந்தை தான் அக்குழந்தை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சஞ்சீவ் உறவினர்கள் சிலர் விஜய் ரசிகர்கள் என்பதால் அவரை நேரில் காணச் சென்றனர். அப்போது தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த தகவல் உண்மை தானா என்று சஞ்சீவ் தான் கூற வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:All you need to know about actor vijay baby video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X