New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/03/lololo-1.jpg)
Amit Shah Grand Daughter Viral Video
தன்னுடைய தொப்பி தானா என்பதை மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்துவிட்டு தலையில் மாட்டிக் கொண்டது அந்த குழந்தை.
Amit Shah Grand Daughter Viral Video
Amit Shah Grand Daughter Viral Video : அமித் ஷா முதல்முறையாக மக்களவை தேர்தலிம் இம்முறை போட்டியிடுகிறார். குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் தொகுதியில், எல்.கே.அத்வானிக்கு பதிலாக இவரை களம் இறக்கியுள்ளது பாஜக.
நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியது பாஜக. அதில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார். அவருடைய பேத்தியும் இந்த பேரணியில் கலந்து கொண்டார்.
ஒரு வயது அல்லது இரு வயது மட்டுமே நிரம்பியிருக்கும் அந்த குழந்தையை தூக்கிய அமித் ஷா, அக்குழந்தை ஏற்கனவே அணிந்திருக்கும் தொப்பியை கழற்றிவிட்டு, பாஜகவின் கட்சி தொப்பியை மாட்டிவிட அனைவரும் முயற்சி செய்தனர். ஆனால், அக்குழந்தை விடாப்பிடியாக மறுத்துவிட, அவருடைய தொப்பியையே மீண்டும் மாட்டிவிட்டனர்.
இருப்பினும் அது தன்னுடைய தொப்பி தானா என்பதை மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்துவிட்டு தலையில் மாட்டிக் கொண்டது அந்த குழந்தை. நேற்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவியது அந்த வீடியோ.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.