New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/03/vicky-18.jpg)
ashwin mankad buttler video
முன்னாள் வீரர்களில் பலரும் அஸ்வினின் செயலை விமர்சித்துள்ளனர்.
ashwin mankad buttler video
ashwin mankad buttler video : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அஸ்வின் செய்த ஒரு “மன்கட் (ரன் அவுட்)” ஒட்டு மொத்த ஐசிசி விதியையும் இப்போது புரட்டி போட வைத்துள்ளது. கிர்க்கெட் வீரர்கள் தொடங்கி, பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவரும் தற்போது பேசிக் கொண்டிருப்பது அஸ்வின் செய்த அவுட் பற்றி தான்.
2019 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெயில், ராகுல் துவக்கம் அளித்தனர். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து கெயில், மாயங்க் அகர்வால் இணைந்து 56 ரன்கள் சேர்த்தனர். மாயங்க் 22 ரன்களில் வெளியேற, அடுத்து சர்ப்ராஸ் கான் களத்துக்கு வந்தார். அவர் 46 ரன்கள் சேர்த்தார். கெயில் 79 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் சேர்த்தது.
அடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தது. ரஹானே - பட்லர் இணைந்து 78 ரன்கள் சேர்த்தனர். பின் ரஹானே 27 ரன்களில் வெளியேறினார். அட்டகாசமாக ஆடி வந்த பட்லர் 69 ரன்களில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினால் அவுட் செய்யப்பட்டார். அஸ்வின் பட்லரை அவுட் செய்த முறை சர்ச்சை மட்டுமில்லை பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது.
அஸ்வின், பந்தை வீசுவதற்கு தயாராகும் போது ராஜஸ்தான் வீரர் பட்லர் க்ரீஸை தாண்டினார். இதை கவனித்த அஸ்வின் உடனே, பட்லரை “மன்கட் (ரன் அவுட்)” செய்தார். இது பெரும் வாக்குவாதத்தை கிளப்பியது. அஸ்வின் வேண்டுமென்றே நின்று, பட்லர் கிரீஸை விட்டு வெளியேற விட்டுவிட்டு ரன் அவுட் செய்தார் என கூறப்பட்டது. இதனால் பட்லருக்கும், அஸ்வினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 3 -வது நடுவர் இதனை அவுட் என அறிவித்தார்.
The Whole Incident #Ashwin #Butler pic.twitter.com/tHpYKtG0OQ
— Whistlepodu/GGMU (@Whistleepodu) 25 March 2019
ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவ மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பட்லர் அவுட் தான். அஸ்வினின் இந்த செயல் சரியா? தவறா? என்ற வாதம் சமூகவலைத்தளங்களில் மட்டுமில்லை கிரிக்கெட் உலகிலேயே கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவாதத்தை நிறுத்த ஐசிசி நிர்வாகம் இப்போது கிரிக்கெட் விதிமுறை புத்தகங்களை புரட்ட தொடங்கியுள்ளது.அஸ்வினுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. முன்னாள் வீரர்களில் பலரும் அஸ்வினின் செயலை விமர்சித்துள்ளனர்.
ஐபிஎல் வீரர்களையும் அதற்கு அனுமதியுங்கள்.. பிரதமர் மோடியிடம் அஸ்வின் கோரிக்கை!
இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ள அஸ்வின், “நான் செய்த செயல் ஐசிசி விதிகளில் உள்ளது தான். விளையாட்டின் ஆற்றலை குறைக்கும் வகையில் நான் செயல்பட மாட்டேன். விதிகளில் என்ன உள்ளதோ அதைத்தான் செய்தேன்” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.