Advertisment

வந்தாரை வாழ வைத்த சென்னைக்கே இந்த நிலைமையா? கடைசியில் நாங்க எங்க போவோம்! நெட்டிசன்களின் குமுறல்.

ஊராட இது ச்சே..ஒரே குப்பை, அழுக்கு, மனிஷங்களா இவிங்களாம்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Water Scarcity

Chennai Water Scarcity

சென்னை.. தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமில்லை.கடல் தாண்டி, தேசம் தாண்டி, உறவுகளை பிரிந்து பஞ்சம் பிழைக்க வரும் அனைவருக்கும் இது தாய் வீடு போல. ”வந்தவர்களை ஏன் வந்தீர்கள்? உங்கள் ஊர் எது?” என்ற கேள்வி இங்கு யாரும் கேட்க முடியாது. சென்னைக்கு வந்து நன்றாக சம்பாதித்து விட்டு ”போதும்ப்பா எங்க ஊருக்கே போறோம்” என்று சொல்பவர்களை கண்டிப்பாக நல்ல நிலைமையுடன் வழி அனுப்பி வைக்கும்.

Advertisment

அப்படி போறவர்கள் கடைசியில் என்ன சொல்வார்கள் தெரியுமா> ஊராட இது ச்சே..ஒரே குப்பை, அழுக்கு, மனிஷங்களா இவிங்களா? என்று தான். ஆனால் சென்னை இப்படி பாழாய் போனதற்கு இவர்களும் ஒரு காரணம் என்பதை கடைசி வரை அவர்கள் உணர போவதில்லை.

சென்னையில் பிழைக்க தெரிந்து விட்டால் போதும் அடுத்த 5 வருடத்தில் அவர்கள் தான் அடுத்த முதலாளி. சின்னதாக தள்ளு வண்டி போட்டு கடையை தொடங்கியவர்கள் எல்லாம் இன்று ஏசி ஹோட்டலின் அதிபர்கள். தூங்குவதற்கு பரந்து விரிந்து கிடக்கும் கடலே போதும் என்று எத்தனையோ பேர் அங்கேயே தங்களது இரவு தூக்கத்தை கழித்து வருகின்றனர். சென்னையில் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் யாரை பார்த்தாலும் உங்கள் சாதி என்னவென்று கேட்க மாட்டார்கள். அப்படி கேட்டகவும் முடியாது.

வழியே தெரியாம பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தால் ”எங்கம்மா போனும்” என்று அவர்களாகவே வந்து வழி சொல்லும் எத்தனையோ ஆட்டோக்கார அண்ணாக்கள் சென்னைக்கு கிடைத்த வரம். இப்படி ஏகப்பட்ட சிறப்புகள் எங்கள் சென்னைக்கே சொந்தமானது. ஆனால் இன்று சென்னையின் நிலைமையோ வேறு! காலை முதல் சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடப்பவர்களுக்கு தெரியும். இன்றைய ட்ரெண்டிம்ங் ஹாஷ்டேக் #தவிக்கும்தமிழ்நாடு. இந்த ஹாஷ்டேக் ட்ரெண்டானதற்கு காரணமே சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் தான்.

குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் குடம் குடமாக எடுத்துக் கொண்டு வீதிகளில் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு பகல் பாராமல் தண்ணீர் லாரிகளை மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். குடிக்கும் தண்ணீர் ஒரு குடம் 50 ரூபாய். சென்னையின் தற்போதைய நிலை இதுதான். குடிநீர் தரும் ஏரியான பூண்டி, செம்பரபாக்கம், புழல், வீராணம் ஏரிகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை. குடிக்க, சமைக்க, தண்ணீர் இல்லாமல் மக்கள் வீதிகளிலே நின்றுக் கொண்டிருக்கின்றனர். தண்ணீர் லாரி வந்ததும் குடங்களை வரிசையில் போட.

மேலும் படிக்க.. தண்ணீர் பிரச்னைக்கு அரசு போர்க்கால நடவடிக்கை : துணை முதல்வர் பன்னீர்செல்வம்

இதுஒருபுறம் என்றால், சென்னை ஹோட்டல்களின் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால பிரபல ஹோட்டல்களில் மதிய உணவுகள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டு ஒட்டு மொத்த சென்னை மக்களும் அதிர்ச்சியின் விளிம்பில் உள்ளனர்.

இந்த நிலைமையை பார்த்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர். அவர்களின் குமுறல்கள் சென்னை வாசிகள் ஒவ்வொருவரின் மன நிலைமையாக வந்து விழுகிறது. இப்படியே போனால் சென்னையின் நிலைமை என்ன? என்பது தான் அனைவரின் கேள்வியும்.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment