“அந்த நாள் முதல் இந்த நாள் வரை” சிவாஜின்னு நெனப்பு... நல்ல பாம்புடன் சுற்றிய முதியவர் - வைரல் வீடியோ

ஹங்கர்கா கிராமத்தில் ஒரு நபர் பாம்புடன் நடந்து செல்வதை கண்ட இளைஞர்கள் இருவர் அந்த காட்சிகளை தங்களின் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற அந்த வீடியோ வைரலாகி உள்ளது

ஹங்கர்கா கிராமத்தில் ஒரு நபர் பாம்புடன் நடந்து செல்வதை கண்ட இளைஞர்கள் இருவர் அந்த காட்சிகளை தங்களின் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற அந்த வீடியோ வைரலாகி உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cobra viral video, viral videos, snake viral videos, karnataka

Cobra viral video : உங்களின் வீட்டுக்குள் ஒரு நல்ல பாம்பு புகுந்தால் என்ன செய்வீர்கள்? வன உயிரினங்கள் பற்றிய புரிதல் இருப்பவர்கள் என்றால் வனத்துறையிடம் தெரிவித்து பாம்பை மீட்க உதவி செய்வீர்கள். இது ஒரு வாடிக்கையான நிகழ்வு என்றால் அடித்து கொன்றுவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவீர்கள் (ஆனால் இது நல்ல விசயம் கிடையாது மக்களே)…

Advertisment

ஆனால் இங்கே ஒரு முதியவர் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை எடுத்து தோளில் சுற்றிக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்குள் வலம் வந்துள்ளார். அக்கம் பக்கம் இருந்த கிராமவாசிகள் இவரை பார்த்ததும் ”துண்டக் காணோம்… துணிய காணோம்னு” ஓடுனது தான் மிச்சம்னா பாத்துக்கங்க…

மேலும் படிக்க : அம்மாடியோவ்… பார்த்ததும் மூச்சடைக்க வைக்கும் ராஜநாகம்! வைரலாகும் வீடியோ

Advertisment
Advertisements

கர்நாடக மாவட்டம் பெலகவி மாவட்டத்தில் வீட்டிற்குள் வந்த நல்ல பாம்பை முதியவர் ஒருவர் கழுத்தில் சுற்றிக் கொண்டு சைக்களில் வலம் வந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நேரம் அவரின் தொல்லைகளை பார்த்து பொறுத்துக் கொண்ட கிராமவாசிகள் பிறகு அவரிடம் கெஞ்சி கூத்தாடி, அந்த பாம்பை வனத்திற்குள் விட சம்மதித்தார் அவர்.

மேலும் படிக்க : வைரல் வீடியோ : ஆபத்தில் உதவியவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் குரங்கு

ஹங்கர்கா கிராமத்தில் ஒரு நபர் பாம்புடன் நடந்து செல்வதை கண்ட இளைஞர்கள் இருவர் அந்த காட்சிகளை தங்களின் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற, வைரலாக பரவியது இந்த வீடியோ.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: