கொரோனாவிற்கு பாடல்கள் மூலம் விழிப்புணர்வு - லாக்டவுனில் கோவை தம்பதியினர் புது முயற்சி

இந்த பாடலின் மூலம்  கொரோனாவின் தீவிரத்தையும், கைகளை கழுவுதல் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறாமல் இருப்பதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே! 

coimbatore couple corona awareness song video went viral : நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 21 நாட்கள் வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் விழி பிதுங்கி டிவி, செல்போனை செயல் இழக்க செய்யும் நிலைக்கே சென்றுவிட்டனர். இன்னும் 14 நாட்கள் இருக்கிறது.

மேலும் படிக்க : பாதுகாப்பு ஆடைகள் இல்லை… குப்பை பைகளை பயன்படுத்தும் ஸ்பெயின் டாக்டர்கள்

தாங்கள் வெகு நாட்கள் கற்றுக் கொள்ளாமல் இருந்த, கற்று,  பரண் மீது ஏற்றிய பல கலைகளையும் தூசி தட்டி மீண்டும் பிராக்டிஸில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி சேது லக்‌ஷ்மி இருவரும், கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

7ஜி ரெய்ன்போ காலனி படத்தில் வரும் கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை மெட்டில், கொரோனா விழிப்புணர்வுக்கு தேவையான வரிகளை சேர்த்து அந்த பாடலை இருவரும் பாடியுள்ளனர். சமூக வலைதளத்தில் இந்த விழிப்புணர்வு வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சேது லக்‌ஷ்மி தன்னுடைய அப்பாவிடம் இருந்து பாடல்கள் பாட கற்றுக் கொண்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாடிக் கொண்டு வருகிறார். அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிகண்டனும், தன் மனைவியின் திறமையை நன்றாக அறிந்து அதில் மென்மேலும் வளர அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அவரும் தற்போது இசை பயிற்சி பெற்று வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த பாடலின் மூலம்  கொரோனாவின் தீவிரத்தையும், கைகளை கழுவுதல் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறாமல் இருப்பதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close