New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/07/Viral-ATM-hack-784x441.jpg)
Cool ATM Hack Viral Video
பாதியிலேயே நிறுத்திவிடாமல் முழு வீடியோவையும் பார்த்தால் அந்த பெண் சொல்வது எவ்வளவு பெரிய உண்மை என்று தெரிய வரும்.
Cool ATM Hack Viral Video
Cool ATM Hack TikTok Viral Video : எவ்வளவு தான் பணம் சம்பாதிச்சாலும் மாதத்தின் முதல் நாளில் இருக்கும் அந்த சந்தோசம் மாதக்கடைசியில் இருப்பதில்லை. தேவையற்ற செலவுகளில் சிக்கி நாம், நம்முடைய பணம் எங்கே தான் போகின்றது என்று யாருக்குமே தெரிவதில்லை. சின்ன சின்ன செலவுகளில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்று எத்தனை முறை யோசித்தாலும், மாதக்கடைசியில் அது ஒன்றுமே இல்லாமல் தான் போய்விடுகிறது. நம்முடைய பிரச்சனையை சரி செய்ய இதோ இந்த பெண்மணி மிக முக்கியமான வழி ஒன்றை சொல்கிறார் என்னன்னு கேளுங்க...
cool atm hack! pic.twitter.com/8KcJk2ojZV
— je$$ (@imacarchick) 26 June 2019
பாதியிலேயே நிறுத்திவிடாமல் முழு வீடியோவையும் பார்த்தால் அந்த பெண் சொல்வது எவ்வளவு பெரிய உண்மை என்று தெரிய வரும். முழுசா பாத்தீங்களா? கோபப்படாதீங்க... நாங்களும் ஏதாவது ட்ரிக் இருக்கும்னு தான் பாத்தோம். ஆனா அப்படி ஏதும் இல்லை. ஏ.டி.எம்.-ல் இருந்து பணம் எப்படி எடுப்பது என்பதை நமக்கு தெளிவாக வீடியோவில் காட்டிவிட்டு, இப்படி கை நிறைய பணம் வேண்டும் என்றால், அதற்கு நாம் முதலில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார் அப்பெண். அவர் சொல்வதும் சரி தானே. மாதத்தின் முதல்நாள், உங்கள் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இயங்குங்கள். வாழ்த்துகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.