Corona Paridhabangal Corona Tamil Memes, COVID19, Coronavirus : இன்னைக்கு நாம லேட்டா தான் இந்த செக்ஷன ஆரம்பிச்சு இருக்கோம். நாளுக்கு நாள் கடுமையாகிக் கொண்டே இருக்கும் கொரோனா அச்ச சூழலில் நம்மை வாழ வைப்பவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள், டிக்டாக் வீடியோ வெளியிடுவோர்கள், மற்றும் அசட்டுத்தனமாய் அறிக்கைவிட்டு திட்டு வாங்கும் அரசியல்வாதிகள் தான். ஏற்கனவே டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டதால் இன்று நாம் மீம்ஸ் கிரியேட்டர்களின் அபரிதமான அறிவை போற்றும் வகையில் இந்த செய்தியை படிப்போம்.
மேலும் பார்க்க : இந்த பாடலை ஏ.ஆர். ரெஹ்மான் பார்க்காமல் இருக்க வேண்டும்!
சாதாரண காலத்திலேயே நல்ல கண்டெண்ட்டுகளுக்காக காத்துக்கிட்டு கெடப்பாங்க. நல்ல கண்டெண்ட்டாவே மாட்டுச்சுன்னா சும்மாவா விடுவாங்க. எடுத்த எடுப்பில் சிக்கிக் கொண்டது எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தான்.
சேனிடைஸ்டர்ஸை தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் போதும். சோப்பையே பயன்படுத்தினாலும் போதுமானது தான். தேவைக்கு அதிகமாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்ட ஓ.சி.டி. பையத்தியங்களுக்காகவே உருவாக்கப்பட்ட மீம் தான் இது.
தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத காரணத்தால் இப்போதைக்கு வீட்டில் இருந்து நோய் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்வது தான் ஒரே வழி. வீட்டில் இருங்கள். மனித குலம் வாழ வழி செய்யுங்கள்.
டியர் பேரண்ட்ஸ் எனக்கு உங்களின் கஷ்டம் புரிகின்றது. ஆனாலும் நீங்க பண்றது எல்லாம் அநியாயம் யா...
மேலும் படிக்க : கொரோனா பரிதாபங்கள் : முதல்ல உங்ககிட்ட இருந்து தான் ”கொரானாவை” காப்பாத்தனும்!
இது ஏதோ அரசியல் பதிவு போல. எதுக்கும் நாம கருத்து ஏதும் சொல்லாம அமைதியாவே இருந்துக்குவோம்.
தெரியும் தெரியும் இதுக்கு என்ன அர்த்தம்னு நல்லவே தெரியும். வொர்க் ஃப்ரம் ஹோம்க்கு தனியா பரிதாபங்கள் செக்ஷன் ஸ்டார்ட் பண்ணனும் போல.
அதாகப்பட்டது பொதுமக்களுக்கு சொல்லிக் கொள்வ விரும்புவது என்னவென்றால் கொரோனாவில் இருந்து தப்பிக்க இனி வரும் கொஞ்ச நாட்களுக்கு ”வீட்லயே கம்முனு கெடங்க”. நாளை மீண்டும் ஒரு பரிதாபம் வகை செய்திகளில் உங்களை சந்திக்கின்றோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.