கொரோனா பரிதாபங்கள் : முதல்ல உங்ககிட்ட இருந்து தான் ”கொரானாவை” காப்பாத்தனும்!

கோடிக்கணக்குல செலவு பண்ணி, அரசாங்கம் இந்த நோய தடுக்குறது பத்தி யோசிச்சுட்டு இருந்தா உங்களுக்கு இந்த ரணகளத்துலையும் ஒரு குதுகலம் கேக்குது…

trending viral video of men reciting Corona in local temple festival Tamil Nadu : கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் அனைவரும் “செல்ஃப் சோசியல் டிஸ்டன்ஸில்” இருந்து நோய் பரவலை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் முதற்கொண்டு துப்புரவு பணியாளர்கள் வரையில் அனைவரும் தீவிரமாக இதற்காக பணியாற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க : பேரழிவில் இருந்து மீண்டு வரும் வுஹான்… பெரும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி தான்!

ஆனால் தமிழகத்தில் கொரோனாவிற்கு வாய்ப்பே இல்லை என்றபடி சிலர் செய்யும் காரியம் இருக்கிறதே. அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து சீரியஸான விஷயங்களை படித்து படித்து உங்களுக்கு ”போர”டித்திருக்கும் அல்லது அச்சத்திற்கு ஆளாகியிருப்பீர்கள். ஆனால் இந்த வீடியோவில் இருப்பவர்களை பாருங்கள்!

கும்பகோணம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழா ஒன்றில் பங்கேற்ற இளைஞர்கள், வழிபாட்டின் போது கொரோனா கொரோனா என்று மேளதாள இசைகளுக்கு ஏற்றவாறு, கூச்சலிட்டு ஆரவாரம் செய்து கொண்டு போகிறார்கள். எது எப்படியோ, ஆனால் மக்களே, கைகளை கழுவுங்கள். சமூக வெளியில் இருந்து ஒதுங்கியிருங்கள். உங்களால் ஒரு பரவல் தடுக்கப்படுகிறது என்றால், இது போன்ற இக்கட்டான சூழலில் இதை விட வேறென்ன தேவை இருக்கப்போகின்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of men reciting corona in local temple festival tamil nadu

Next Story
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்கும் ராகுல் டிராவிட் – டிரெண்டிங் ஆகும் டுவீட்கள்coronavirus, rahul dravid, coronavirus rahul dravid thread, lessons from rahul dravid covid 19, coronavirus india, coronavirus memes, viral news, indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com