Advertisment

கொரோனா தீவிரம் : எல்லாத்துக்கும் கேரளா முன்னோடி தான்... ”மாஸ்க்” தயாரிக்கும் கைதிகள்!

வெறும் மாஸ்கினை மட்டும் மக்களுக்கு தராமல், இந்த நோய் பரவலை தடுப்பது எப்படி, இதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, covid-19. kerala, face masks, ways to prevent coronavirus, coronavirus india, coronavirus deaths, trending, indian express, indian express news

coronavirus, covid-19. kerala, face masks, ways to prevent coronavirus, coronavirus india, coronavirus deaths, trending, indian express, indian express news

Coronavirus Outbreak: Kerala gets prisoners to make face masks to meet the demands : நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றினை தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை  மத்திய அரசும், மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. சில மாநிலங்களில் மாஸ்க்கள் போன்றவை பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் என்ன செய்வதென்று யோசனை செய்து வருகின்றனர்.  ஆனால் கேரள மாநிலம் ஒரு முன்னெடுப்பாக, இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Advertisment

அதாவது திருவனந்தபுரம் ஜெயில் இருக்கும் சிறைக்கைதிகள், மாநிலத்திற்கு தேவையான மாஸ்கினை செய்து வருகின்றனர். பர்ஸ்ட் பேச்சினை தற்போது டிஸ்பேச் செய்து வருகிறது மத்திய அரசு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். அம்மாநில அரசின் இந்த முன்னெடுப்பிற்கு பலரும் தங்களின் கருத்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

துணியால் செய்யப்பட்டிருக்கும் இந்த மாஸ்க்கினால் எந்த பலனும் கிடையாது. இது நோய் பரவலை தடுத்து நிறுத்தாது. இதற்கு என்95 ரக மாஸ்க்குகள் தான் தேவை என்று சிலர் தங்களின் கருத்துகளை முன்னெடுத்து வைத்துள்ளனர்.

சிலர், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக கேரளா செயல்பட்டுள்ளது. எனவே மற்ற  மாநிலங்களும் இதனை பின் தொடர்ந்தால் நல்லது என்று குரல் எழுப்பியுள்ளனர்.

வெறும் மாஸ்கினை மட்டும் மக்களுக்கு தராமல், இந்த நோய் பரவலை தடுப்பது எப்படி, இதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று சிலர் ஆலோசனையும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க :”சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்” – கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளி

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment