Advertisment

உங்கள விளக்கேத்த சொன்னது ஒரு குத்தமாய்யா? மீம்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

ஆனால் ஒன்று மட்டும் உண்மை... இருக்கு... 05ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் நம் அனைவருக்கும் எண்டெர்டெய்மெண்ட் காத்துக்கிட்டு இருக்கு. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus outbreak memes on 9 minutes blackout on Sunday

Coronavirus outbreak memes on 9 minutes blackout on Sunday : உலக நாடுகள் பலவும் கொரோனா நோய் பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்தியாவும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நரேந்திர மோடி, கொரோனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போரை நினைவு கூறும் வகையில் விளக்கினை ஏற்றவும், செல்போன் லைட்டால் டார்ச் அடிக்கவும் கூறியுள்ளார். நம் மக்கள் அனைவரும் விளக்கு ஏற்றுகிறார்களோ இல்லையோ, ஆனால் இன்று கண்டெண்ட் கொடுத்ததிற்காக மோடியின் ஸ்டேட்மெண்டை கவனித்து வருகிறார்கள். அவற்றில் சில இங்கே!

Advertisment
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Coronavirus outbreak memes on 9 minutes blackout on Sunday

ஏற்கனவே இப்படித்தான் மாலை ஐந்து மணிக்கு அனைவரும் வீட்டு வாசலில் வந்து நின்று கைகளை தட்டுங்கள். மருத்துவர்களுக்கு நன்றி செலுத்துங்கள் என்று கூறினார் மோடி. ஆனால் மக்கள் அன்று செய்ததெல்லாம் வேறலெவல் சம்பவம் தான். இப்போது வெளியேகியிருக்கும் புதிய அறிவிப்பை நினைத்தால் அனைவருக்கும் ”கெதக்” என்று தான் இருக்கிறது.  மேலும் படிக்க :நீங்க ஊதுன சங்கு சத்தம்… யெப்பா! உலகமே சிரிக்குது!

Coronavirus outbreak memes on 9 minutes blackout on Sunday

 

ஊரடங்கினால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே கடைக்கு சென்று வருகின்றனர். ஊரடங்கு உத்தரவுக்கான அறிவிப்பை 4 மணி நேரத்தில் அமல்படுத்தியதால் இடம்பெயர் தொழிலாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.  மேலும் நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் நடந்தே தங்களின் சொந்த ஊர் சென்றனர். ஆனால் இந்த விளக்கேற்றும் நிகழ்வுக்கான முதல் அப்டேட் முதல்நாள் நைட்டே வந்துவிட்டது என்றும் பலர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். மேலும் படிக்க : புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையில்லை: அரசின் மேல் அவநம்பிக்கை கொள்ளும் மக்கள்

Coronavirus outbreak memes on 9 minutes blackout on Sunday

21 நாட்கள் கழித்து இந்திய பொருளாதாரம், விலைவாசி, கூட்டமாக மீண்டும் நகரங்களை நோக்கி நகர காத்திருக்கும் பெரும்வாரியான மக்கள் தொகை என அனைத்தையும் நினைக்கும் போது கூடுதல் பயமாக இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். அது தொடர்பாகவும் இது வரையில் எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இந்தியாவில் ஏப்ரல் 17ம் தேதிக்கு பிறகு விமானம் மற்றும் ரயில் முன்பதிவுகள் துவங்கியுள்ளது.

மேலும் படிக்க : 21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா? ஆம் என்றால் எப்படி?.

Coronavirus outbreak memes on 9 minutes blackout on Sunday

வரவர நம்ம ஹாசிப் கானும்  பயங்கரமா கேலிச்சித்திரம் வரைய ஆரம்பித்துவிட்டார்.

Coronavirus outbreak memes on 9 minutes blackout on Sunday

நாம் மீம்களோடு நின்றுவிட்டோம். ஜனதா கர்ஃப்யூ அன்று மாலை 5 மணிக்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கொரோனாவை ஓடவிட்ட மக்களை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை... இருக்கு... 05ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் நம் அனைவருக்கும் எண்டெர்டெய்மெண்ட் காத்துக்கிட்டு இருக்கு.

மேலும் படிக்க : குழந்தைகளுக்கு பெயர் ‘கொரோனா, கோவிட்’ – இது என்ன மாதிரி மனநிலையோ!

Coronavirus Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment