சமூகம் பெரிய இடம் போல! 205 டாலருக்கு சாப்பிட்டுவிட்டு 5000 டாலர் டிப்ஸ்..

எங்களின் ஊழியர் ஒருவருக்கு நீங்கள் அளித்த ஆதரவு பெறும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

By: Updated: December 16, 2020, 04:50:40 PM

Customer leaves waitress $5000 tip :  கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டு தொழில்கள் முடங்கி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். இது போன்ற சூழலில் அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் செய்த காரியம் பெரும் திகைப்பையே ஏற்படுத்தியுள்ளது.

205 டாலர்களுக்கு உணவு உட்கொண்ட அவர், தனக்கு உணவு பரிமாறிய உணவக ஊழியருக்கு 5000 டாலர்களை டிப்ஸாக கொடுத்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் அந்தோணிஸ் அட் பாக்ஸன் என்ற இத்தாலிய உணவகத்தில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

We have no words other than THANK YOU !!

Unbelievable support for our staff here!!

THANK YOU THANK YOU THANK YOU…

Posted by Anthony’s at Paxon Hollow on Saturday, 12 December 2020

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உணவகத்தினர் தங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் உங்களுக்கு நன்றி நன்றி நன்றி… எங்களின் ஊழியர் ஒருவருக்கு நீங்கள் அளித்த ஆதரவு பெறும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் அவருக்கு இந்த பணம் உதவும். நாங்கள் உங்கள் மீது அன்பு செலுத்துகிறோம் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க : இது ஜெயிலா? இல்ல இது தான் ஜெயிலா?! நம்ம வீட்டை விட நல்லா இருக்குதே!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Customer leaves waitress 5000 dollars tip on 205 bill dollars netizens laud the generosity

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X