New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/rajinikanth-grandson-viral-video.jpg)
rajinikanth grandson viral video, ரஜினிகாந்த்
rajinikanth grandson viral video, ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 3 வயது பேரன் வேத் கிருஷ்ணா, ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் செய்யும் குறும்புத்தனமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் தொழிலதிபர் அஸ்வின் இருவருக்கும் பிறந்த மகன் தான் வேத் கிருஷ்ணா. இவருக்கு தற்போது 3 வயதாகிறது.
பேரனுக்கு சர்ப்ரைஸ் தர அமெரிக்காவில் இருந்த வந்த சூப்பர் ஸ்டார்!!!
இவர் தனது பாட்டி லதா மற்றும் தாய் சவுந்தர்யாவுடன் இணைந்து ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். குழந்தைகள் வாழ்வு நலனுக்காக இயங்கும் ஒரு நிறுவனத்தின் தொடக்க விழாவிற்கு இவர்கள் சென்றிருந்தனர்.
அங்கு குத்துவிளக்கு ஏற்றி இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். சவுந்தர்யாவின் கையைப் பிடித்து விளக்கு ஏற்றும் வேத், அதனை கேக் என்று நினைத்து ஊதுகிறார். பின்னர் பாட்டியின் சேலையை பிடித்து இழுத்து கூப்பிடுகிறார். இவ்வாறு அவர் செய்யும் அனைத்து குறும்புகளும் வீடியோவாக வைரலாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.