cute viral trending video of a puppy chasing ducklings : திங்கள் கிழமை காலையில், கொளுத்தும் மே மாத வெயிலில் கொஞ்சம் அளவுக்கதிகமாக வேலை பார்த்து டென்சனா இருந்தா, உங்களுக்கு தான் இந்த வீடியோ. ஸ்ரீலா ராய் என்பவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில் ஒரு வாத்து தன்னுடைய குஞ்சுகளுடன் கூட்டமாக ஓரிடம் விட்டு மற்றொரு இடம் நகர்கிறது.
உற்றுப் பார்த்தால் அந்த கூட்டத்தில் நாய்க் குட்டி ஒன்றும் உடன் பயணிப்பது தெரியும். அந்த நாய்க்குட்டிக்கு வாத்து மீது அதீத பாசம் போல. அதனால் வாத்து குஞ்சுகள் தங்களின் தாயுடன் ஒன்றாக வர முயற்சிக்கும் போதெல்லாம் அவற்றை விலகிக் கொண்டு வாத்தின் அருகே நின்று கொள்கிறது. மனிதர்களுக்கு மட்டும் தான் “பொசசிவ் வருமா என்ன?”…
மேலும் படிக்க : நீ என்ன பெரிய புலியா? மாஸ் காட்டிய யானை – வைரல் வீடியோ
ஒரு லட்சத்தி 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 533 நபர்கள் ரிட்வீட் செய்த இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil