யானைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. யானை என்றதும் எல்லாருக்கும் உடனே ஒரு சந்தோசம் தொற்றிக் கொள்ளும். தினமும் யானைகள் வீடியோ பார்ப்பது இந்த கொரோனா காலகட்டத்தில் மனதுக்கு நல்லது அப்டின்னு வேற யாரும் சொல்லல… நாங்க தான் சொல்றோம்.
மேலும் படிக்க : அட கொஞ்ச நேரம் குளிக்கலாம்னு வந்தா… தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட யானை – வைரல் வீடியோ
நடிகை தியா மிர்சா சமீபத்தில் தன்னுடைய டிவிட்ட பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ, தற்போது காட்டில் யார் அதிக பலம் கொண்ட விலங்கு என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வெளியிட்டிருக்கும் 21 நொடி வீடியோ ஒன்றில், யானை ஒன்று செல்லும் வழி தடத்தில் புலி ஒன்று ஒய்யாரமாக படுத்திருக்கிறது. நாம் கூட ஏதாவது தாக்குதல் நடக்குமோ என்று கண்களை அகல விரித்து பார்த்துக் கொண்டிருந்தால் யானை வருகையை பார்த்ததும் தலை தெறிக்க புலி ஓடியேவிட்டது.
83 ஆயிரத்திற்கும் மேலே இந்த வீடியோவை மக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil